கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 590 சியாஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 300 மாருதி சுஸுகி சியாஸ் கார்கள் மட்டும்தான் விற்பனையாகியிருந்தன. இதன் மூலமாக விற்பனையில் 97 சதவீத வளர்ச்சியை, மாருதி சுஸுகி சியாஸ் பதிவு செய்துள்ளது. மேலும் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட செடான் ரக கார்களின் பட்டியலில், 9வது இடத்தையும் மாருதி சுஸுகி சியாஸ் தன்வசப்படுத்தியுள்ளது.

Maruti Suzuki Ciaz

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி சியாஸ் காரின் ஆரம்ப விலை 9.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி சியாஸ், பிரீமியம் கார் ஆகும். எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக சியாஸ் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி சுஸுகி சியாஸ் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும்.

Maruti Ciaz

அதிகபட்சமாக 103.25 பிஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் (Manual) மற்றும் ஆட்டோமேட்டிக் (Automatic) கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மாருதி சுஸுகி சியாஸ் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 20.65 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 20.04 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி சியாஸ் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இதில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் சுஸுகி கனெக்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி சியாஸ் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி சியாஸ், பிரீமியமான கார் என்பதால், பயணிகளுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும். ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு, மாருதி சுஸுகி சியாஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆக உள்ளது.

ஓரளவிற்கு குறைவான விலையில், பிரீமியமான அதே நேரத்தில் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு செடான் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி சியாஸ் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் என்பதால், பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2024, 23:55 [IST]
English summary
Maruti suzuki ciaz sales report march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+