தெருவுல நின்னு கூவி கூவி விக்கற அளவுக்கு நிலம கை மீறி போயிருச்சு! என்ன பண்றதுனு தெரியாம மண்டய சொறியும் மாருதி

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz). நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், மாருதி சுஸுகி சியாஸ் கார் விற்பனையில், 5 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், 659 சியாஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 695 ஆக இருந்தது.

இது நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி, 5 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி சியாஸ் பிரீமியமான கார் ஆகும். இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் (NEXA Showrooms) வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிரீமியமான காராக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி சியாஸ் விற்பனையில் தொடர்ந்து தடுமாறி வருகிறது.

Maruti Suzuki Ciaz

நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமும் அது தொடர்ந்துள்ளது. மாருதி சுஸுகி சியாஸ் கார் ஒரு மாத விற்பனையில், 3 இலக்க எண்களை கடந்து, 4 இலக்க எண்களை தொட்டு விட்டால், அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்படும். அந்த அளவிற்கு மாருதி சுஸுகி சியாஸ் விற்பனையில் தடுமாறி கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது செடான் ரக கார்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. பெரும்பாலான செடான் ரக கார்கள், மாருதி சுஸுகி சியாஸ் காரை போல், விற்பனையில் தடுமாறி கொண்டுதான் உள்ளன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்றொரு செடான் ரக காரான டிசையர் (Maruti Suzuki Dzire) விற்பனையில் அமர்க்களப்படுத்தி கொண்டுள்ளது.

Maruti Suzuki Ciaz Seat

இனி வரும் மாதங்களில் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன. ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரை வெகுவாக மேம்படுத்தி, அதன் புதிய தலைமுறை மாடலை, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. அத்துடன் புதிய வசதிகள், புதிய டிசைன் என மொத்தமாக உருமாறி வந்துள்ளது. எனவேதான் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மாருதி சுஸுகி சியாஸ், மிக நீண்ட காலமாக, மிகப்பெரிய அளவிலான அப்டேட்கள் எதையும் பெறவில்லை. ஒருவேளை அப்டேட் செய்யப்படும்பட்சத்தில், விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது நடக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் முடிவு எடுப்பது என்பது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கைகளில் உள்ளது.

ஏனெனில் மாருதி சுஸுகி சியாஸ் காரை அப்டேட் செய்ய வேண்டுமென்றால், மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும். அந்த அளவிற்கு சியாஸ் கார், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு லாபத்தை ஈட்டி தருமா? என்பது சந்தேகம்தான். ஆனால் மாருதி சுஸுகி டிசையர் காரின் கதையே வேறு. எனவே சியாஸ் மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்படுவது என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி (Honda City), ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) உள்ளிட்ட கார்கள் உடன், மாருதி சுஸுகி சியாஸ் போட்டியிட்டு வருகிறது.

சன்ரூஃப் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான வசதிகள் இல்லாதது, பழைய 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுவது போன்றவற்றை எல்லாம், மாருதி சுஸுகி சியாஸ் காரின் குறைகளாக நிறைய பேர் கருதுகின்றனர். இவை எல்லாம் இந்த காரின் விற்பனை 'டல்' அடித்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2024, 23:57 [IST]
English summary
Maruti suzuki ciaz sales report october 2024 5 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+