மாருதி கார்கள் மட்டும் தான் இவ்வளவு அதிகமாக விற்பனையாகும்!! பெட்ரோல் காரில் இருந்து மக்கள் மாறுகிறார்கள்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி இந்தியாவின் சிஎன்ஜி கார்கள் மார்க்கெட்டில் சுமார் 73% ஆதிக்கத்தை கொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் உடன் தகவல்கள் கிடைத்துள்ளன.

சிஎன்ஜி (CNG) கார்கள் என்றால் என்ன என்பது உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். சிஎன்ஜி கார்கள் என்பன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கக்கூடியவை ஆகும். சிஎன்ஜி கார்களிலும் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், காரை இயக்குவதற்கு பெட்ரோலை நிரப்ப தேவையில்லை. அதற்கு பதிலாக சிஎன்ஜி-ஐ நிரப்பினாலே போதுமானது.

maruti suzuki cng cars sales

கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆனது பெட்ரோல்/ டீசல் உடன் ஒப்பிடுகையில் விலை குறைவானதாக உள்ளது. அதுமட்டுமின்றி, 1 லிட்டர் பெட்ரோல்/ டீசலில் இயங்குவதை காட்டிலும் 1 கிலோ சிஎன்ஜி-இல் கார் அதிக தொலைவிற்கு பயணிக்கிறது. இதனால், டாக்ஸி உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றவையாக சிஎன்ஜி கார்கள் விளங்குகின்றன.

சிஎன்ஜி கார்களை மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் என முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்தும் விற்பனை செய்கின்றன. ஆனால், நாம் எதிர்பார்த்ததை போல் சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கம் தொடர்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் சிஎன்ஜி கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

maruti suzuki cng cars sales

இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் விற்பனை ஆனது வருடத்திற்கு வருடம் கணிசமாக அதிகரித்து வருகிறது. 2023 ஏப்ரல் - 2024 மார்ச்சில், இந்தியாவில் சுமார் 6.24 லட்ச சிஎன்ஜி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் சிஎன்ஜி கார்களும் அடங்குகின்றன. இந்தியாவில் 1 வருடத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.

இந்தியாவில் கடந்த 1 வருடத்தில் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை 15% அதிகரித்துள்ளது. இந்த 6.24 லட்ச சிஎன்ஜி வாகனங்களில், மாருதி சுஸுகி நிறுவனம் மட்டும் 4.5 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 1 வருடத்தில் மார்க்கெட்டில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட சிஎன்ஜி கார்களில் மாருதி சுஸுகியின் சிஎன்ஜி கார்கள் மட்டும் சுமார் 73% பங்கை கொண்டுள்ளன.

maruti suzuki cng cars sales

அதாவது, இந்தியாவில் 4இல் 3 பேர் நிச்சயமாக மாருதி சுஸுகியின் சிஎன்ஜி காரை வாங்குகின்றனர். ஆனால், மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்யும் மொத்த கார்களில் சிஎன்ஜி கார்கள் வெறும் 25% மட்டுமே ஆகும். அதாவது, விற்பனையாகும் 4 மாருதி சுஸுகி கார்களுள் ஒன்று மட்டுமே மாருதி சுஸுகி சிஎன்ஜி கார் ஆகும். ஆல்டோ கே10 சிஎன்ஜி காரில் இருந்து கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி வரையில் பல்வேறு விதமான மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.74 லட்சத்தில் இருந்து ரூ.14.96 லட்சம் வரையில் உள்ளன. சிஎன்ஜி கார்கள் விற்பனையை மேலும் அதிகரிக்க விரும்புவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா தெரிவித்துள்ளார். அடுத்த 1 வருடத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது மாருதி சுஸுகியின் இலக்காக உள்ளது.

maruti suzuki cng cars sales

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களை போன்று மாருதி சுஸுகியின் திட்டமும் எலக்ட்ரிக்கை நோக்கி தான். ஆனால், அதற்கிடையில் சிஎன்ஜி வாகனங்கள் மூலமாகவும் கொஞ்சம் இலாபத்தை பார்த்துவிட வேண்டும் என்பது மாருதி சுஸுகியின் விருப்பமாக உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டில் குறைந்தது 10 ஆயிரம் சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 1, 2024, 8:00 [IST]
English summary
Maruti suzuki cng cars sales number crossed 4 5 lakhs in 2023 24 financial year
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X