ஆட்டோ கியர் ஷிஃப்ட் கொண்ட கார் மாடல்களின் விலையை குறைத்த மாருதி!.. இதுவே மாருதி கார்களை வாங்க சரியான நேரம்!
இந்தியர்கள் ஒவ்வொருத்தரும் வெவ்வேறு விதமான ரசனையும், டேஸ்ட்டையும் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்ப தன்னுடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது மாருதி சுஸுகி (Maruti Suzuki). அந்தவகையில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் தன்னுடைய தயாரிப்பு கார் மாடல்களில் பல விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளை (Gear Options) வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றே ஏஜிஎஸ் (AGS) எனப்படும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் (Auto Gear Shift) ஆகும். இந்த கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் கார் மாடல்களின் விலையையே தற்போது மாருதி சுஸுகி குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே எந்தெந்த கார் மாடல்களின் விலை குறைந்துள்ளன? எவ்வளவு ரூபாய் வரை குறைக்கப்பட்டு உள்ளது? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மேலும், கூடுதலாக மாருதி சுஸுகி தன்னுடைய தயாரிப்புகளில் என்ன மாதிரியான கியர் ஆப்ஷன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையும் காணலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களாக ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரஸ்ஸோ (S-Presso), செலிரியோ (Celerio), வேகன்-ஆர் (Wagon-R), ஸ்விஃப்ட் (Swift, Dzire), பலினோ (Baleno), ஃப்ரான்க்ஸ் (Fronx) மற்றும் இக்னிஸ் (Ignis) ஆகியவை இருக்கின்றன. இந்த கார் மாடல்களில் அனைத்திலும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் ஓர் ஆப்ஷனாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்த குறிப்பிட்ட ஆப்ஷனின் விலையை மட்டுமே மாருதி சுஸுகி குறைத்திருக்கின்றது. ரூ. 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விலைக் குறைப்பிற்கு, ஏஜிஎஸ் கொண்ட தேர்வுகளுக்கு போதுமான அளவு வரேவற்புக் கிடைக்காததே காரணம் என கூறப்படுகின்றது. ஆமாங்க, ஏஜிஎஸ் கொண்ட கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டே அவற்றின் விலையில் தற்போது ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே வரும் நாட்களில் மற்ற கியர்பாக்ஸ் தேர்வுகளைப் போலவே ஏஜிஎஸ் கியர்பாக்ஸைக் கொண்ட தேர்வுகளின் விற்பனையும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், மாருதி சுஸுகி வழங்கிக் கொண்டிருக்கும் மிக சிறப்பான கியர்பாக்ஸ் தேர்வுகளில் ஏஜிஎஸ்-ம் ஒன்றாகும். இந்த தானியங்கி டிரான்ஸ்மிஷன் ஒரு நுண்ணறிவு ஷிப்ட் கண்ட்ரோல் ஆக்சுவேட்டரைக் கொண்டுள்ளது.
இது டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் கன்ட்ரோலர் யூனிட்டால் இயக்கப்படுகிறது. இந்த அமைப்பானது டைனமிக் டிரைவிங் நிலைமைகளை புத்திசாலித்தனமாக மதிப்பீடு செய்யும். மேலும், ஆட்டோமேட்டிக்காக கியர்களை மிக சிறந்த செயல்திறனை அது வெளியேற்றும். இத்தகைய சூப்பரான சிறப்புகளைத் தாங்கியதே ஏஜிஎஸ் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் ஏஜிஎஸ் கியர்பாக்ஸை இந்தியாவில் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்தது.
இந்த கியர்பாக்ஸ் கிராண்ட் விட்டாரா, எர்டிகா போன்ற நிறுவனத்தின் மேலும் சில முன்னணி கார் மாடல்களிலும் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் ஏஜிஎஸ் போன்றே இன்னும் சில ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை இந்திய சந்தையில் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் சிவிடி ஆகியவையே அவை ஆகும். இத்துடன், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளையும் மாருதி சுஸுகி தன்னுடைய தயாரிப்புகளில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்திலேயே இந்தியாவில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, மிகப் பெரிய அறிமுகமாக இந்தியாவில் புதிய டிசையர் கார் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் இன்னும் ஒரு சில வாரங்களில் அரங்கேறிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்து வரும் ஏஜிஎஸ் தேர்வுகளுக்கான வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே மாருதி சுஸுகி தற்போது ரூ. 5 ஆயிரம் வரை விலை குறைப்பைச் செய்திருக்கின்றது. எனவே வரும் நாட்களில் இந்த அம்சம் கொண்ட தேர்வுகளின் விலை சற்றே உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








