புதுசா கார் வாங்க போறீங்களா? மாருதியோட இந்த அறிவிப்ப கேட்டுட்டு போய் வாங்குங்க! கார்களோட விலைய குறைச்சுருச்சு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் இரண்டு பிரபலமான கார் மாடல்களின் விலையைக் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தன்னுடைய சிறிய கார் மாடல்களின் பக்கம் இந்தியர்களின் கவத்தை ஈர்க்கும் பொருட்டே அது விலைக் குறைப்ப செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆல்டோ கே10 (Alto K10) மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso) ஆகிய கார் மாடல்களின் விலையையே மாருதி சுஸுகி தற்போது குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எவ்வளவு ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த இரண்டு குட்டி கார் மாடல்களுக்கும் டிமாண்ட் சற்று அதிகமாகவே கிடைத்து வந்தது. ஆனால், சமீப சில காலமாக இந்த இரண்டு குட்டி கார் மாடலுக்குமான தேவை குறைந்துக் காணப்படுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணமாக எஸ்யூவி ரக கார்கள் உள்ளன.

Maruti suzuki cuts prices

சந்தையில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு பன்மடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியர்கள் எஸ்யூவி கார் வெறியர்களாக மாறியிருக்கின்றனர். இதன் விளைவாகவே ஹேட்ச்பேக் மற்றும் செடான் உள்ளிட்ட பிற ரக கார் மாடல்களின் விற்பனை சமீப சில காலமாக சரிவைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையிலேயே இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மற்றும் பிரெஸ்ஸோ ஆகியவற்றின் விலையைக் குறைத்திருக்கினஅறது. விரைவில் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இந்த விழாக்காலத்தைக் கருத்தில் கொண்டும் இந்த கார் மாடல்களின் விலைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

அதேவேளையில், குறிப்பிட்ட வேரிண்டுகளின் விலையையே மாருதி சுஸுகி குறைத்திருக்கின்றது என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ரூ. 6,500 தொடங்கி ரூ. 2 ஆயிரம் வரை விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆல்டோ கே10 விஎக்ஸ் வேரியண்ட் விலையே ரூ. 6,500 வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், எஸ்-பிரெஸ்ஸோ எல்எக்ஸ்ஐ வேரியண்டின் விலையே ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டு வேரியண்டுகளின் விலை மட்டுமே குறைக்கப்பட்டு இருக்கின்றது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், விரைவில் மேலும் சில கார் மாடல்களின் முக்கிய வேரியண்டுகளின் விலையும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் மாருதி ஆல்டோ கே10 பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் மாடல் ரூ. 3.99 லட்சம் தொடங்கி ரூ. 5.80 லட்சம் வரையிலான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், எஸ்-பிரெஸ்ஸோ-விலும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதன் விலை ரூ. 4.26 லட்சம் தொடங்கி ரூ. 5.95 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த இரண்டு கார் மாடல்களின் பக்கமே வாடிக்கையாளர்களைக் கவரும் பணியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இந்த விலை குறைப்பால் இந்த இரண்டு கார் மாடல்களின் விற்பனையும் கணிசமாக உயரும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த பிரிவை மையப்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக கார்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்போதைக்கு எஸ்யூவி கார்கள் பிரிவில் டாடா பஞ்ச் கார் மாடலே பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக உள்ளது. இதுவே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடலும்கூட.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2024, 19:36 [IST]
English summary
Maruti suzuki cuts prices on alto k10 s presso to boost sales
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+