மாருதி கார் வாங்க இதான் செம டைம்! ரூ60 ஆயிரம் வரை தள்ளுபடி கொடுக்குறாங்க!

தற்போது பிப்ரவரி மாதம் பிறந்துள்ள நிலையில் மாருதி நிறுவனம் தனது ஹேட்ச்பேக் கார்களுக்கு வரிசையாக தள்ளுபடிகளை அறிவித்துள்ளன0 அதன்படி ஒவ்வொரு காருக்கும் ரூபாய் 60 ஆயிரம் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் கேஷ் தள்ளுபடிகளாகவும், எக்ஸ்சேஞ்ச் போனஸ்களாகவும், கார்ப்பரேட் தள்ளுபடிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. தள்ளுபடிகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி ஆல்டோ கே10: சுஸூகி நிறுவனம் தனது ஆல்டோ கே10 காருக்கு ரூபாய் 62 ஆயிரம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது அனைத்து பெட்ரோல் வேரியன்ட் கார்களுக்கும் பொருந்தும். இந்த ரூ62,000 என்பது ரூபாய் 40 ஆயிரம் கேஸ் தள்ளுபடியாகவும், ரூபாய் 15,000 எக்சேஞ்ச் போனஸாகவும், ரூபாய் 7000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் வழங்கப்பட்டுள்ளன. இதன் சிஎன்ஜி வேரியன்டுகளுக்கு ரூபாய் 39 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

maruti suzuki discount february 2024

மாருதி சுஸூகி எஸ்பிரெஸ்ஸோ: மாருதி நிறுவனம் தனது சுஸூகி எஸ்பிரெஸ்ஸோ ஏஎம்டி வெர்ஷன் காருக்கு ரூபாய் 61 ஆயிரம் தள்ளுபடி வழங்கியுள்ளது. இது ரூபாய் 40 ஆயிரம் கேஷ் தள்ளுபடியாகவும், ரூபாய் 15,000 எக்சேஞ்ச் போனஸாகவும், ரூபாய் 6000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக மேனுவல் வேரியன்டிற்கு தனியாக தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேனுவல் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 56 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கேஸ் தள்ளுபடியாக ரூபாய் 30,000 தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 6000 தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய் 36,000 தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.

maruti suzuki discount february 2024

மாருதி சுஸூகி செலிரியோ: மாருதி நிறுவனம் தனது செலிரியோ காருக்கு ரூபாய் 61 ஆயிரம் வரை தள்ளுபடிகளை வழங்கி உள்ளது. தனது எஸ்பிரெஸ்ஸோ காருக்கு எப்படி தள்ளுபடி வழங்கியுள்ளது. அதே போலவே இந்த செலிரியோ காருக்கும் தள்ளுபடி வழங்கியுள்ளது. கேஷ் தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரமும், எக்சேஞ்ச் போனதாக ரூபாய் 15,000, கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 6000 என மொத்தம் ரூ 61 ஆயிரம் தள்ளுபடிகளை வழங்கி உள்ளது.

எஸ்பிரெஸ்ஸோ கார் போல இல்லாமல் இந்த செலிரியோ காரில் அனைத்து பெட்ரோல் வேரியன்ட்களுக்கும் இந்த ரூபாய் 61 ஆயிரம் தள்ளுபடி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியன்டிற்கு வழக்கம் போல ரூபாய் 36,000 தள்ளுபடிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேனுவல் ஆட்டோமேட்டிக் என அனைத்து வேரியன்ட்களும் இதே தள்ளுபடி தான் இருக்கிறது.

maruti suzuki discount february 2024

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: மாருதி ஸ்விஃப்ட் கார் விரைவில் அப்டேட் செய்யப்பட போகிறது. அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஏற்கனவே ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்டார்க்கில் உள்ள ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்ய நிறுவனம் ரூபாய் 42 ஆயிரம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

அதன்படி கேஷ் தள்ளுபடியாக ரூபாய் 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூபாய் 20,000, கார்ப்பரேட் தள்ளுபடியாக 7000 தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கார் தற்போது விற்பனையாகும் விலையில் இருந்து ரூபாய் 42,000 தள்ளுபடி விலையில் இந்த காரை தற்போது நீங்கள் புக் செய்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஸ்விஃப்ட் கார் இருந்தால் அது அனைத்தும் விற்று தீர அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி சுஸூகி டிசையர்: மாருதி நிறுவனம் தனது சுஸூகி டிசையர் காரை இந்த ஆண்டு அப்டேட் செய்யப்போகிறது. எப்படி ஸ்விஃப்ட் கார் அப்டேட் செய்யப்படுகிறதோ அதே போலவே டிசைன் காரும் அப்டேட் செய்யப்படுகிறது. அப்டேட் செய்யப்பட்ட டிசையர் கார் தற்போது இந்தியாவில் ஆங்காங்கே சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை நம்மால் காண முடிகிறது இதன் ஸ்பை புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஸ்டாக்கில் இருக்கும் மாடலை விற்பனை செய்ய மாருதி நிறுவனம் இந்த காருக்கு ரூபாய் 37,000 வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 15,000 கேஷ் தள்ளுபடியாகவும், ரூபாய் 15,000 எக்சேஞ்ச் போனதாகவும், ரூபாய் 7,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்த பிப்ரவரி மாதம் ஏகப்பட்ட தள்ளுபடிகள் அறிவித்துள்ளது. முக்கியமாக ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து வெளியிடப் போவதன் அறிகுறியாக தற்போது உள்ள காருக்கு சிறப்பான தள்ளுபடி அறிவித்துள்ளது. பொதுவாக ஸ்விஃப்ட் காருக்கு எவ்வளவு தள்ளுபடிகளை மாருதி நிறுவனம் அறிவிக்காது. தற்போது ஸ்டாக்கில் உள்ள கார்களை தீர்ப்பதற்காக இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 15:50 [IST]
English summary
Maruti suzuki discount february 2024 up to 62000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X