நாளை அறிமுகமாகிறது மாருதியின் டிரீம் சீரிஸ் பதிப்பு கார்கள்.. ஆல்டோ, செலிரியோ இன்னும் அழகா தெரியபோது!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் (Hatchpack) ரக கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு பதிப்புகளை அதன் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த சிறப்பு பதிப்பு டிரீம் சீரிஸ் (Dream Series edition) எனும் பெயரில் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களாக ஆல்டோ கே10 (Alto K10), செலிரியோ (Celerio) மற்றும் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) ஆகியவையே உள்ளன.

இந்த மாடல்களிலேயே புதிய சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இவை விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதை முன்னிட்டே இப்போதே இந்த கார்களுக்கான புக்கிங் பணிகளை ஏற்க தொடங்கிவிட்டது மாருதி சுஸுகி நிறுவனம். இந்த சிறப்பு பதிவுகளை குறைவான எண்ணிக்கையிலேயே விற்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Maruti suzuki dream series edition

நாளைய தினமே (ஜூன் 4) மாருதி சுஸுகி அதன் ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகிய கார் மாடல்களில் டிரீம் சீரிஸ் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஜூன் மாத இறுதி வரை மட்டுமே இந்த சிறப்பு பதிப்புகளின் விற்பனை நடைபெறும் என கூறப்படுகின்றது.

மேலும், குறைவான எண்ணிக்கையிலேயே அவை விற்கப்படும் என கூறப்படுகின்றது. ஆனால், எத்தனை யூனிட்டுகள் வரை விற்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக மாருதி சுஸுகி அறிவிக்கல்லை. வழக்கமான தேர்வுகளைக் காட்டிலும் இது சற்று அதிகமான சிறப்பு வசதிகளைத் தாங்கியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கூடுதல் அம்சங்களாக ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திரை, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் மிக சிறந்த இசை அனுபவத்தை வழங்கும் சவுண்ட் சிஸ்டம் போன்ற சிறப்பு வசதிகளையே இந்த சிறப்பு பதிப்பு கார்களில் மாருதி சுஸுகி வழங்க இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி, ஆல்டோ கே10 ரூ. 3.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், எஸ்-பிரஸ்ஸோ ரூ. 4.26 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் மற்றும் செலிரியோ ரூ. 5.36 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்கப்படுகின்றது. ஆனால், நாளைய தினம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிரீம் சீரிஸ் சிறப்பு பதிப்புகள் இதைவிட சற்று அதிக விலையைக் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போதே மாருதி சுஸுகியின் இந்த தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், அதன் விற்பனையை இன்னும் பலமடங்காக உயர்த்தும் எண்ணத்தில் அந்நிறுவனம் இருக்கின்றது. இதன் விளைவாகவே தற்போது அனைத்து ஆரம்பநிலை ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களிலும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மாருதி களமிறங்கி இருக்கின்றது.

இப்போது சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை ஹேட்ச்பேக் ரக கார்களின் பக்கம் திருப்பிவிடும் நோக்கிலும் மாருதி சுஸுகி இந்த பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதில் மாருதி சுஸுகி வெற்றி காணுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக ஒவ்வொரு மாத விற்பனை புள்ளி விபரமும் அமைந்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அடுத்து வரும் மாதத்தில் விற்பனையில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைக்கும் நோக்கில் அது சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 10:51 [IST]
English summary
Maruti suzuki dream series edition launch tomorrow
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+