33கிமீ மைலேஜ் தரும் மாருதி சிஎன்ஜி கார் பார்க்க இப்படித்தான் இருக்குமா? ரூ.8.74 லட்சத்தில் கிடைக்கிறது!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் புதிய தலைமுறை டிசைர் (New-Generation Dzire) காரை இந்த டிசம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. ரூ.6.79 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிசைர் காரை மக்கள் பலரும் ஆர்வத்துடன் புக் செய்து வருகின்றனர். அதேபோல், ரூ.8.74 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிசைர் சிஎன்ஜி (CNG) காரையும் வாடிக்கையாளர்கள் பலர் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு டெலிவிரி செய்வதற்காக புதிய டிசைர் சிஎன்ஜி கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை (Dealership Showrooms) வந்தடைய துவங்கி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகி உள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. அரசாங்கமும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றான எரிபொருளில் இயங்கக்கூடிய கார்களை கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளதால், எலக்ட்ரிக், ஹைப்ரீட் மற்றும் சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு மாருதி சுஸுகியின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

dzire cng cars to showrooms

ஏனெனில், விற்பனை செய்யப்படும் மாருதி கார்களில் பெரும்பாலானவற்றில் சிஎன்ஜி வெர்சன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், டிசைர் காரிலும் சிஎன்ஜி வெர்சன் ஆனது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய நியூ-ஜென்ரேஷன் டிசைர் காரிலும் சிஎன்ஜி வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய டிசைர் சிஎன்ஜி கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள படங்களில் வெள்ளை நிறத்திலான டிசைர் சிஎன்ஜி காரை பார்க்க முடிகிறது. ஆனால், காரின் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. அதேபோல், காரின் முன்பக்கத்தில் கிரில் பகுதி மற்றும் ஃபாக் விளக்குகளை சுற்றிய பிளாஸ்டிக் பேனல்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.

dzire cng cars to showrooms

புதிய மாருதி சுஸுகி டிசைர் காரில் 1.2 லிட்டர், இசட்-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 80 பிஎச்பி மற்றும் 112 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதே பெட்ரோல் என்ஜின் தான் டிசைர் சிஎன்ஜி காரிலும் வழங்கப்படுகிறது.

ஆனால், டிசைர் சிஎன்ஜி காரில் 69 பிஎச்பி மற்றும் 102 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை மட்டுமே இந்த பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால், டிசைர் சிஎன்ஜி காரில் 33.73km/kg வரையிலான மைலேஜை பெறலாம் என மாருதி சுஸுகி தெரிவிக்கிறது. வி.எக்ஸ்.ஐ (VXi) மற்றும் இசட்.எக்ஸ்.ஐ (ZXi) என 2 விதமான வேரியண்ட்களில் நியூ-ஜென்ரேஷன் டிசைர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

dzire cng cars to showrooms

டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், ஸ்மார்ட் கீ, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எல்இடி ஹெட்லேம்ப்கள் & டெயில்லேம்ப்கள், 6 ஏர்பேக்குகள், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள், வயர்லெஸ் மொபைல் புரோஜெக்‌ஷன், ரியர் ஏசி வெண்ட்ஸ், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை புதிய டிசைர் காரின் முக்கியமான சிறப்பம்சங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி கார்கள் நல்ல மைலேஜ் தருவதால், அவை அதிகமாக டாக்ஸி உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு தான் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ஷோரூமுக்கு வந்திருக்கும் இந்த டிசைர் சிஎன்ஜி காரும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பதால், இதுவும் அத்தகைய பயன்பாட்டிற்கு தான் கொண்டுவரப்பட்டிருக்கும் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 25, 2024, 20:17 [IST]
English summary
Maruti suzuki dzire cng cars starts to reach dealership showrooms
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X