விற்பனைக்கு வர இன்னும் 2 வாரம் கூட இல்ல... ரெடியா இருக்குங்க புக்கிங் துவங்க போறாங்க!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய டிசைர் (Dzire) காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. மக்கள் நிறைய பேர் விரும்பி வாங்கும் பிரபலமான ஸ்விஃப்ட் என்கிற ஹேட்ச்பேக் ரக காரின் செடான் ரக வெர்சன் தான் டிசைர் ஆகும். மாருதி சுஸுகியின் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பெக்ட் செடான் காராக விளங்கும் டிசைர் தற்போதைக்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில செடான் கார்களுள் ஒன்றாக உள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய டிசைர் கார் மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசைர் கார் வருகிற நவம்பர் 11ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுமையான வெளிப்பக்கம், ரீ-ஸ்டைலில் கேபின், கூடுதல் தொழிற்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டிசைர் காரை பற்றிய முக்கியமான 5 சிறப்பம்சங்களை இனி பார்க்கலாம்.

வெளிப்பக்க தோற்றம்: விற்பனைக்கு வருவது 4ஆம் தலைமுறை டிசைர் ஆகும். இதுவரையில், டிசைர் கார் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஸ்விஃப்ட் காரை போன்று இருந்தது. ஆனால், புதிய டிசைர் கார் தனித்துவமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கிடைமட்டமாக பொருத்தப்பட்ட ஹெட்லைட்கள் உடன் காரின் முன்பகுதி முற்றிலும் புதிய ஸ்டைலில் கொண்டுவரப்பட்டுள்ளதை ரோடு டெஸ்ட்டிங்கின் போது வெளியான புதிய டிசைர் காரின் படங்கள் காட்டியிருந்தன.
உட்புற தோற்றம்: புதிய டிசைர் காரின் வெளிப்பக்கத்தை போலவே, காரின் உட்புறத்தையும் தனித்துவமான தோற்றத்தில் மாருதி சுஸுகி வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இதன்படி, 3-ஸ்போக் டிசைனில் ஸ்டேரிங் சக்கரம், புதிய ஃப்ளோடிங் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் லேயர்களாக கொண்ட டேஸ்போர்டு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. முற்றிலும் கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள புதிய டிசைர் காரின் கேபினில் ஆங்காங்கே சில்வர் நிற ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப வசதிகள்: மாருதியின் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ சாஃப்ட்வேர் உடன் 9-இன்ச்சில் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமான அம்சமாக புதிய டிசைரில் வழங்கப்பட உள்ளது. அத்துடன், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய புஷ்-பட்டன் உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்: மத்திய அரசின் வலியுறுத்தலின்படி, அனைத்து கார்களின் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய டிசைர் காரில் 6 ஏர்பேக்குகள் உடன், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி பாயிண்ட்கள் போன்றவை வழங்கப்பட உள்ளது.

என்ஜின் ஆப்ஷன்ஸ்: புதிய ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்ட அதே புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் ஆப்ஷனை புதிய டிசைர் காரிலும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதிகப்பட்சமாக 80 எச்பி மற்றும் 111 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 2024ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார் அறிமுகங்களுள் புதிய மாருதி சுஸுகி டிசைர் காரின் அறிமுகமும் ஒன்றாகும். ஸ்விஃப்ட்டின் தோற்றத்தை உரித்து வைத்தது போன்று இருந்ததால் டிசைர் விற்பனையும் இதுவரை சிறப்பாக இருந்து வருகிறது. ஆனால், புதிய டிசைர் கார் தனது தனி பாதையில் செல்லவுள்ளது போல் தெரிகிறது. ஆதலால், புதிய டிசைர் மார்க்கெட்டில் வழக்கம்போல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









