மைலேஜை காதலி போல நேசிப்பவரா நீங்க? நவம்பர் வர காத்திருங்க.. அதிகம் மைலேஜ் தரும் மாருதி கார் அறிமுகமாக போகுது!

ஒட்டுமொத்த இந்திய வாகன உலகின் கவனத்தையும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) தன் பக்கம் ஈர்த்துள்ளது என்றே கூறலாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக நிறுவனத்தின் புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடல் உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய டிசையர் காரின் அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் விற்பனைக்கு வர இன்னும் வெகுநாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், புதிய டிசையர் காரின் அறிமுகம் விரைவில் அரங்கேற இருப்பதை உறுதி செய்திருக்கின்றது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, புதிய டிசையர் காரின் அறிமுகமானது வருகின்ற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அரங்கேற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 'இந்த காருக்கு ஏன் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்க வேண்டும்' என விஷயம் தெரியாதவர்கள் சிலர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Maruti suzuki dzire launch date

தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, புதிய மாருதி சுஸுகி டிசையர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இவை இரண்டுமே அதிகம் மைலேஜை வழங்கும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 25 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளையில், சிஎன்ஜி ஆப்ஷன் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 33 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இத்தகைய மைலேஜை புதிய டிசையர் வழங்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால்தான் பலர் இந்த காரின் வருகையை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

1.2 லிட்டர், 3 சிலிண்டர், இசட் சீரிஸ் எஞ்சினே புதிய டிசையர் கார் மாடலில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதே எஞ்சினே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் மாடலிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் ஆற்றல் மிக்கது.

இந்த மோட்டாரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதே மோட்டாரே புதிய தலைமுறை டிசையரின் சிஎன்ஜி வெர்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த துள்ளியமான எந்தவொரு விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்சினில் மட்டுமல்ல வெளிப்புற தோற்றத்திலும் லேசான மாற்றங்களை இந்த கார் பெற்றிருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புதிய கிரில், புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் பனி மின் விளக்குகள் இந்த காரை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகின்றது.

இதுதவிர, டூயல் டோன் அலாய் வீல் மற்றும் சுறாவின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டெனா ஆகியவையும் இந்த காரில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. சிறப்பம்சங்கள் விஷயத்திலும் புதிய டிசையர் சிறந்த வாகனமாக இருக்கப்போவது தெரிய வந்துள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள்கூட இதில் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதுதவிர, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் புதிய டிசையர் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், இதுபோன்று இன்னும் பல்வேறு பிரீமியம் தர அம்சங்களை டிசையர் காரில் எதிர்பார்க்கலாம். அந்த அளவிற்கே மாருதி சுஸுகி புதிய தலைமுறை டிசையரை மெருகேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தகவல்களே எதிர்பார்ப்பாளர்களின் கவனத்தை கூடுதலாக கவர்ந்து வருகின்றது. இந்த நிலையிலேயே புதிய டிசையரின் அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இது டிசையர் கார் பிரியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 5:00 [IST]
English summary
Maruti suzuki dzire launch date revealed 4 november 2024 here is more details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+