காரை பார்த்தால் யாராக இருந்தாலும் மயங்கிடுவாங்க! மிடில்-கிளாஸ் மக்களுக்காக மாருதி உருவாக்கியுள்ள புதிய கார்!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புத்தம் புதிய காராக 2024 டிசைர் (Dzire) மாடலை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.6.79 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிசைர் கார் மொத்தம் 9 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், உயர்நிலை இசட்.எக்ஸ்.ஐ+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.14 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டிசைர் கார், மிகவும் குறைந்த விலையிலும் வேண்டாம்... அதேநேரம் அதிக விலையிலும் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு, இந்த காரின் மிட் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.
வி.எக்ஸ்.ஐ (VXI) என அழைக்கப்படும் இந்த காரின் மிட் வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஒரே செடான் காராக மாருதி சுஸுகி டிசைர் உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்படும் டிசைர் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய டிசைர் காரில் ஏகப்பட்ட மாற்றங்களை மாருதி சுஸுகி வழங்கி உள்ளது. அவற்றுள் பெரும்பாலானவற்றை புதிய டிசைரின் வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டில் இருந்து பெறலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், புதிய டிசைனிலான க்ரில் மற்றும் நேர்த்தியான ஸ்டைல் பார்ட்ஸ் உள்ளிட்டவற்றை புதிய டிசைர் வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டின் முன்பக்கத்தில் பெற முடியும். இருப்பினும், எல்இடி கிரிஸ்டல் விஷன் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்-களை இந்த காரில் பெற முடியாது.
2024 டிசைர் வி.எக்ஸ்.ஐ கார் தொடர்பான வீடியோவில், இந்த காரில் ஹலோஜன் புரோஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு இருப்பதை காணலாம். ஃபாக் விளக்குகளுக்கான குழிகள் காரின் முன்பக்கத்தில் உள்ளன; ஆனால் அவற்றுள் ஃபாக் விளக்குகள் இல்லை. ஏனெனில், ஃபாக் விளக்குகள் 2024 டிசைர் காரின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டில் ஃபாக் விளக்குகளை கூடுதல் தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

க்ரில் பகுதிக்கு மேலே, டிசைர் வி.எக்ஸ்.ஐ காரில் க்ரோம் கார்னிஷ் உடன் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது. மிட் வேரியண்ட்டாக இருப்பினும், இந்த காரில் அலாய் சக்கரங்கள் இல்லை; ஆர்14 இரும்பு சக்கரங்களே பொருத்தப்பட்டுள்ளன. 2024 டிசைர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளும், பின் சக்கரங்களில் டிரம் பிரேக்குகளும் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய டிசைர் காரில் விலை குறைவான வேரியண்ட்களில் வெளிப்பக்க கதவு கைப்பிடிகள், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் தனியாக தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் கிடைக்கும். அதுவே, வி.எக்ஸ்.ஐ மிட்-வேரியண்ட்டில் இவை காரின் உடல் நிறத்தில் கிடைக்கும். இதில், பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளில் டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் B-பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவையும் இந்த காரின் மேற்கூரையில் காண முடிகிறது. காருக்கு பின்பக்கத்தில் Y-வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ரிவர்ஸ் லைட்கள் உள்ளிட்டவை மலிவான ஹலோஜன் பல்ப்களாக உள்ளன. க்ரோம் கார்னிஷை கொண்ட பளபளக்கும் கருப்பு நிற ஸ்ட்ரிப் ஆனது பின்பக்கத்தில் டெயில்லைட்களை இணைக்கிறது.
காரின் பின்பக்கத்தில் அமைந்துள்ள ஏரோ பூட் லிப் ஸ்பாய்லரும் நமது கவனத்தை ஈர்க்கிறது. காருக்கு உள்ளே 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள், ஸ்மார்ட்போன் வழியாக ஓவர்-தி-ஏர் அப்டேட்கள், ஆன்போர்டு வாய்ஸ் உதவி, யுஎஸ்பி துளைகள் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மாருதி சுஸுகி டிசைர் காரை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்களின் தேர்வு இதுவாக தான் இருக்கும். ஏனெனில், குறைந்த விலையிலும் இல்லாமல், அதிக விலையிலும் வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு மிட்-வேரியண்ட்கள் ஏற்றவை ஆகும். இத்தகைய வேரியண்ட்களில் அடிப்படை மற்றும் ஆடம்பரம் என இரண்டும் சரியான கலவையில் கலந்திருக்கும்.


Click it and Unblock the Notifications









