33கிமீ மைலேஜ் தரும் காருக்கான புக்கிங் தொடங்கிருச்சா! தீபாவளி போனஸ் வந்திருச்சுனா யூஸ் ஃபுல்லா செலவு பண்ணுங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் தன்னுடைய புதிய டிசையர் (New Dzire) கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது புதிய டிசையர் கார் மாடலுக்கான புக்கிங்கை ஏற்கும் பணியில் மாருதி கார் விற்பனையாளர்கள் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி அன்றே இந்த காரை அதிகாரப்பூர்வமாக மாருதி சுஸுகி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே புதிய டிசையர் காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது டீலர்கள் அளவிலான புக்கிங் ஆகும். ஆமாங்க, இன்னும் மாருதி சுஸுகி இந்த காருக்கான புக்கிங் பணிகளை அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கவில்லை. விரைவிலேயே அது தொடங்க இருக்கின்றது.

Dealer level booking started for maruti suzuki dzire

இந்த நிலையிலேயே டிசையருக்கு நிரம்பி வழியும் எதிர்பார்ப்பை முன்னிட்டு அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கை ஏற்கும் பணியில் குறிப்பிட்ட சில டீலர்கள் மட்டும் களமிறங்கி இருக்கின்றனர். டீலர்களைப் பொருத்து ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 10 ஆயிரம் வரையில் இதற்கான முன்தொகையாக அவர்கள் வசூலித்து வருவதாக கூறப்படுகின்றன.

குறிப்பாக, எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி பெங்களூருவில் உள்ள டீலர்கள் சிலர் இந்த பணியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், சென்னையிலும் குறிப்பிட்ட சில புதிய டிசையருக்கு புக்கிங்கை ஏற்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து சென்னை டீலர்களிடத்தில் கேட்கையில் அவர்கள் அதுபற்றி தகவல் அளிக்க முன் வரவில்லை.

பலதரப்பட்ட சிறப்பம்சங்களை தாங்கிய ஓர் கார் மாடலாகவே மாருதி சுஸுகி டிசையர் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில், எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லைட்டுகள், 9 அங்குல பெரிய தொடுதிரை சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. இந்த திரை ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாகும்.

இதுதவிர சன்ரூஃப் போன்ற பிரீமீயம் அம்சங்களையும் இந்த கார் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் இந்த காருக்கு இந்தியாவில் தற்போது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களும் புதிய டிசையர் கார் மாடலில் இடம் பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது ஓர் புதிய தலைமுறை வாகனம் என்பதால் இன்னும் பலதரப்பட்ட அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக மைலேஜ் தருவதில் இந்த கார் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர், இசட் சீரிஸ் வகை எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎஸ் பவரையும், 112 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் பெட்ரோல் வெர்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 25 கிமீட்டர் மைலேஜையும், சிஎன்ஜி கிலோ ஒன்றிற்கே 32.85 கிமீ மைலேஜையும் வழங்கும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபத்திலேயே மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்தே அடுத்ததாக புதிய தலைமுறை டிசையர் காரையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2024, 19:00 [IST]
English summary
Maruti suzuki dzire new gen bookings started dealer level here is more details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+