16 வருஷம் 11 மாசத்தில் 3 மில்லியன் யூனிட் உற்பத்தியை எட்டிய மாருதி டிசையர்.. இன்னும் பல சாதனைகளை படைக்க போகுது

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றே டிசையர் (Dzire) கார் மாடல் உள்ளது. இது ஓர் காம்பேக்ட் செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்து 16 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் ஆகின்றன. அதாவது, ஒன்றரை தசாப்தத்திற்கும் அதிகமாக இந்த கார் மாடல் விற்பனையில் உள்ளது. இந்த நிலையிலேயே டிசையர் 3 மில்லியன் யூனிட் உற்பத்தியை எட்டி இருப்பதாக வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஓர் வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஆகும். இந்த மாபெரும் உற்பத்தி எண்ணிக்கையின் வாயிலாக ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய கார் மாடல்களின் வரிசையில் தற்போது டிசையர்-ம் இணைந்திருக்கின்றது. முன்னதாக இவையே 3 மில்லியன் யூனிட் உற்பத்தி சாதனையை எட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Maruti suzuki dzire reaches 3 million units production

ஆகையால், இந்த அதிக எண்ணிக்கை உற்பத்தியை எட்டிய நான்காவது மாருதி சுஸுகி தயாரிப்பாக டிசையர் மாறி இருக்கின்றது. முன்னதாக ஒரு மில்லியன் உற்பத்தி எனும் சாதனையை இந்த கார் மாடல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரலில் எட்டியிருந்தது. இதற்கு அடுத்தபடியாக இரண்டு மில்லியன் யூனிட் எனும் உற்பத்தி சாதனையை அது 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொட்டது.

இந்த நிலையிலேயே அடுத்த ஐந்தாண்டுகளில் (இப்போது) மற்றுமொரு ஒரு மில்லியன் உற்பத்தியை எட்டி அது சாதனைப் படைத்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் மட்டுமே விற்பனைச் செய்யப்படவில்லை. உலகெங்கிலும் உள்ள 48 நாடுகளிலும் இந்த கார் விற்பனைச் செய்யப்படுகின்றது. அவற்றிற்கும் இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அந்தவகையில், 2008 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 2.60 லட்சம் யூனிட்டுகள் டிசையர் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. மாருதி சுஸுகி அதிகம் உற்பத்தி செய்யப்படும் கார் மாடல் மட்டுமில்லைங்க, அதிகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார் மாடலும் ஆகும்.

அந்தவகையில், 2023-24 நிதியாண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாருதி கார்களில் இதுவே இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்தியாவில் தற்போது புதிய தலைமுறை டிசையர் கார் மாடலே விற்பனையில் இருக்கின்றது. இதன் அறிமுகம் சென்ற நவம்பர் மாதத்திலேயே அரங்கேறியது. மிகவும் குறைவான விலையில், அதிக சிறப்புகளுடன் புதிய தலைமுறை டிசையர் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ரூ. 6.79 லட்சம் என்கிற குறைவான விலையிலேயே இது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே அது பெற்றிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மைலேஜ் தருவதிலும் இந்த கார் மாடல் மிகவும் சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, இதன் சிஎன்ஜி ஆப்ஷன் வேற லெவல் மைலேஜை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. கிலோ ஒன்றிற்கே அது 33.73 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். அதேவேளையில், இதன் பெட்ரோல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கியர்பாக்ஸை பொருத்து பெட்ரோல் மைலேஜ் திறன் மாறுபடும். 1.2 லிட்டர், 3 சிலிண்டர் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே எஞ்சினே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் புதிய டிசையரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முந்தைய தலைமுறை டிசையர் கார் மாடலைக் காட்டிலும் புதிய தலைமுறை டிசையர் உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டிலும் மிகப் பெரிய அளவிலான சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு அதிக சிறப்புகளைத் தாங்கிய கார் மாடலாக அது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 14:52 [IST]
English summary
Maruti suzuki dzire reaches 3 million units production milestone in approximately 17 years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+