31 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்கள்ல மக்கள் கூட்டம் அலை மோதிகிட்டு இருக்காம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் மாருதி சுஸுகி டிசையர் காரின், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் 14,012 டிசையர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 11,997 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 17 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி டிசையர் பதிவு செய்து அசத்தியுள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன், மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.
மறுபக்கம் இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன்களிலும், 1.2 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 22.41 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஏஜிஎஸ் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 22.61 கிலோ மீட்டர் மைலேஜையும் மட்டுமே வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.51 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.39 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதும், அதிக மைலேஜை வாரி வழங்குவதும்தான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் பிரம்மாண்டமான வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. வரும் காலங்களில் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.
ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை, தற்போது இருப்பதை காட்டிலும் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








