31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலையில விக்கறாங்களா... பேசாம பைக் வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்...
இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் செடான் (Sedan) ரக கார்கள், மிக வேகமாக தங்கள் செல்வாக்கை இழந்து கொண்டுள்ளன. எனினும் செடான் செக்மெண்ட்டில், விதிவிலக்காக ஒரு கார் மட்டும் விற்பனையில் தூள் கிளப்பி கொண்டுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள செடான் ரக கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி டிசையர் முதன்மையான இடத்தில் உள்ளது.
இந்த சூழலில், மாருதி சுஸுகி டிசையர் காரின் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான (ஜனவரி-ஜூன்) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், 93,811 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 72,278 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில், 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் வசதிகள் ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி டிசையர் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை சந்தித்துள்ளது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை 6.57 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.34 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி டிசையர் கருதப்படுகிறது. மாருதி சுஸுகி டிசையர் காரில், 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் வெர்ஷனில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை எல்லாவற்றையும் விட, சிஎன்ஜி வெர்ஷன் அதிக மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.
மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
வசதிகளை பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, ஏர்பேக்குகள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை மேலும் உயரலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், அனேகமாக நடப்பு ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாக விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது (Honda Amaze), (Hyundai Aura) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








