31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் காரின் விலை இவ்ளோதானா! மாருதி ஷோரூம்களை மொய்க்கும் மக்கள் கூட்டம்!
இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 11,317 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 16,773 ஆக உயர்ந்துள்ளது. இது 48 சதவீத வளர்ச்சி ஆகும். இது உண்மையிலேயே மிகப்பெரிய வளர்ச்சி என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. மாருதி சுஸுகி டிசையர் கார் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகும்.

இதன் பெட்ரோல்/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதன் பெட்ரோல்/ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான மைலேஜ், மாருதி சுஸுகி டிசையர் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஓரளவிற்கு குறைவான விலையும் கூட இந்த காரின் வெற்றிக்கு பின்னால் உள்ள முக்கியமான காரணங்களில் ஒன்றுதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை 6.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.39 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி டிசையர் காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்துதான், மாருதி சுஸுகி டிசையர் காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன. வரும் காலங்களில் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி டிசையர் கார், விற்பனையில் இன்னும் பல்வேறு புதிய உச்சங்களை எட்டலாம் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) போன்ற கார்களுக்கு, மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தி வருகிறது. மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர், இந்த கார்களுக்கு இன்னும் கடுமையான நெருக்கடி ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








