31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 15,894 டிசையர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 13,394 ஆக மட்டுமே இருந்தது. இது 19 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட செடான் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் தன்வசப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Maruti Suzuki Dzire

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.39 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி டிசையர் காரின் பெட்ரோல் இன்ஜின் மாடல்களில், 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 22.41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஏஜிஎஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 22.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. மாருதி சுஸுகி டிசையர் காரானது, பெட்ரோல் தவிர, சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனுடம் விற்பனைக்கு கிடைக்கிறது.

Maruti Suzuki Dzire Side Design

பெட்ரோல் மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்தான், சிஎன்ஜி மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. மாறாக மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி/மேனுவல் மாடல்கள், ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓரளவிற்கு குறைவான விலை மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால்தான், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் செடான் காராக மாருதி சுஸுகி டிசையர் திகழ்கிறது.

இதுதவிர மாருதி சுஸுகி டிசையர் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதில், ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், சுஸுகி கனெக்ட், க்ரூஸ் கண்ட்ரோல், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை தற்போதே சிறப்பாகதான் இருக்கிறது. ஆனால் வரும் காலங்களில் இதன் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வரவிருப்பதுதான் இதற்கு காரணம்.

மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய மாடல், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய மாடல், இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, April 14, 2024, 23:37 [IST]
English summary
Maruti suzuki dzire sales report march 2024 highest selling sedan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+