மைலேஜில் பைக்குகளையே தூக்கி சாப்பிடும் மாருதி காரின் விலை இவ்ளோ கம்மியா! ஷோரூம்ல எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). செடான் ரகத்தை சேர்ந்த இந்த காரின், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம், 16,061 டிசையர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், வெறும் 11,315 ஆக மட்டுமே இருந்தது.
இது 42 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி டிசையர் காரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு அதன் மைலேஜ் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிக மைலேஜ் வழங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. இதுதவிர மாருதி சுஸுகி டிசையர் காருக்கு விலை நிர்ணயமும் கூட சரியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை 6.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.39 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதுதவிர மாருதி சுஸுகி டிசையர் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவேதான் மாருதி சுஸுகி டிசையர் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதுதான் இதற்கான காரணமாக உள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை, மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு அப்டேட்களுடன் வரவுள்ளதால், பழைய மாடலை போல், புதிய மாடலும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இந்த அப்டேட்கள் காரணமாக, புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








