31 கிமீ மைலேஜ்! இவ்ளோ கம்மியான விலைக்கு எப்படி விக்கறீங்கன்னு கஸ்டமர்ஸே கேக்க போறாங்க! யோசிக்காம வாங்கலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செடான் (Sedan) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). தற்போதெல்லாம் செடான் ரக கார்களை வாடிக்கையாளர்கள் யாரும் சீண்டுவதில்லை. எஸ்யூவி (SUV) ரக கார்களைதான் அதிகமாக வாங்குகின்றனர். இருப்பினும் இந்திய சந்தையில் செடான் செக்மெண்ட்டை உயிர்ப்புடன் வைத்து கொண்டுள்ள கார் என மாருதி சுஸுகி டிசையரை குறிப்பிடலாம். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி டிசையர் பதிவு செய்து வருகிறது.
ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை சறுக்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,880 டிசையர் கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 10,853 ஆக குறைந்துள்ளது. அதாவது 3,027 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது தற்காலிகமான வீழ்ச்சியாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் அனேகமாக வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடலின் வருகைக்காக வாடிக்கையாளர்கள் காத்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தற்போது விற்பனையில் உள்ள மாடலுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவிற்கு காரணமாக இருக்கலாம்.

மாருதி சுஸுகி டிசையர், 5 சீட்டர் கார் ஆகும். 5 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதுடன், லக்கேஜ்களையும் கொண்டு செல்வதற்காக, 378 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் 90 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜினின் 5 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், 5 ஸ்பீடு ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாருதி சுஸுகி டிசையர் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, 77 பிஎஸ் பவர் மற்றும் 98.50 என்எம் டார்க் மட்டுமே கிடைக்கும். பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கிறதே என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இது அதிக மைலேஜ் (Mileage) எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கானது.
மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா அமேஸ் (Honda Amaze), ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) ஆகிய பிரபலமான கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி டிசையர் செடான் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை 6.56 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.34 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மாருதி சுஸுகி டிசையர் மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








