இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த செடான் கார்! இந்த காரை இத்தனை பேர் வாங்கீட்டாங்களா?

இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சமீப ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் பலர் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்பத் துவங்கி விட்டதால், செடான் கார்களின் விற்பனை கணிசமான அளவு சரிந்துள்ளது. எஸ்யூவி காரர்கள் தான் தற்போது சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை கொடுக்கிறது. மக்களுக்கு இது வசதியாகவும் இல்லை. அதே நேரத்தில் அது கம்பீரமான லுக்கையும் தரவில்லை என்பதால் அதன் விற்பனை குறைந்து வருகிறது. இருந்தாலும் மாருதி நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. அதைப்பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் செடான் கார்கள் சிறப்பாக விற்பனையாகி வந்தன. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக செடான் ரக கார்களை அறிமுகப்படுத்தி வந்தன. ஆனால் இன்று அந்த ரக கார்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளது. மக்கள் பலர் செடான் கார்களை விரும்பாமல் எஸ்யூவி கார்கள் பக்கம் திரும்பி உள்ளார்கள். இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு காரின் விற்பனை மட்டும் குறையவே இல்லை.

maruti suzuki dzire june 2024

மாருதி சுஸூகி நிறுவனத்தின் டிசையர் கார் செடான் ரக காராகும். கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 13,421 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையான 9,322 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 43.97% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. செடான் கார்களின் விற்பனை எல்லாம் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் இந்த காரின் விற்பனை மட்டும் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் விற்பயான மொத்த செடான் கார்களிலேயே 50.13 சதவீதம் இந்த டிசையர் கார் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலிலும் இந்த மாதிரி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. செடான் கார்களிலேயே அதிகமாக விற்பனையாகும் கார் இதுதான்.

maruti suzuki dzire june 2024

மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை சமீபத்தில் தான் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் டிசையர் காரும் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகமாகும் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில், இந்த காரின் விற்பனை தொடர்ந்து சரியாமல் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு கார் அப்டேட் ஆகப்போகிறது என்ற பேச்சு வந்தால் அந்த காரின் விற்பனை குறைய துவங்கிவிடும்.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கார் அறிமுகமான உடன் வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் மனநிலை மாறும் ஆனால் மக்கள் பலர் புதிதாக வரப்போகும் அப்டேட்டை பற்றி கூட பொருட்படுத்தாமல் இந்த காரை அதிக எண்ணிக்கையில் வாங்கி வருகிறார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த காரில் இருக்கும் வசதிகள் வடிவமைப்பு மற்றும் மைலேஜ் தான்.

maruti suzuki dzire june 2024

மாருதி நிறுவனத்தின் டிசையர் காரை பொறுத்தவரை தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூபாய் 6.56 லட்சம் முதல் ரூ9.39 லட்சம் வரை பல்வேறு விதமான விலைகளில் விற்பனையாகி வருகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களும் உள்ளன.

இந்த காரை மக்கள் அதிகம் விரும்புவதற்கு காரணம் இந்த காருக்கான பராமரிப்பு செலவு தான். இந்த காரை சரியாக பயன்படுத்தினால் ஆண்டுக்கு ரூபாய் 5354 செலுத்தினால் மட்டுமே போதும், சுலபமாக பராமரித்துக் கொள்ள முடியும். சோதனையில் 2 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த காரின் மிக முக்கியமான அம்சம் இதன் மைலேஜ் தான் இந்த கார் 22.41 கிலோமீட்டர் முதல் 31.12 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

மேலும் இந்த காரில் தாராளமான இடவசதி இருக்கிறது. வேகமாக செல்லும்போது ரைடிங் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. பவர்ஃபுல்லான இன்ஜினாகவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் மாருதி நிறுவனத்தின் கார் என்பதால் இந்த காரை சுலபமாக பல்வேறு இடங்களில் சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இதனால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். என்னதான் செடான் மார்க்கெட் குறைந்தாலும் இந்த காரின் விற்பனை குறையவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் காருக்கான மவுசு குறைந்து கொண்டே இருந்தாலும், மாருதி நிறுவனத்தின் டிசையர் காருக்கு நீண்ட ஆண்டுகளாக மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிறுவனம் சிறப்பான தயாரிப்பை வழங்கி உள்ளதால் செக்மெண்ட் முழுவதுமாக சிக்கலில் மாட்டினாலும், இந்த கார் மட்டும் விற்பனை குறையாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 7:00 [IST]
English summary
Maruti suzuki dzire top selling sedan june 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X