யாருடா அந்த பையன், நான்தான் அந்த பையன்னு களம் இறங்கப்போகும் மாருதி! டாடா இருக்குற இடம் தெரியாம ஓடப்போகுது!

சுஸூகி நிறுவனம் இத்தாலியில் நடந்த மோட்டார் வாகன கண்காட்சியில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தை விரைவில் அந்நிறுவனம் இந்தியாவிற்குள் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது. இ-விட்டாரா என பெயர் வைத்துள்ள இருந்த வாகனம் தான் ஜனவரி மாதம் நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் எலெக்ட்ரிக் வாகன அனுபவிப்பை வரிசையாக தயார்ப்படுத்தி வருகிறார்கள். ஒரு சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் ஏற்கனவே களமிறங்கி சிறப்பான விற்பனையையும் பெற்று வருகிறார்கள்0 இந்த பட்டியலில் தற்போது சுஸூகி நிறுவனமும் இணைகிறது.

Maruti Suzuki e Vitara

சுஸூகி நிறுவனம் ஏற்கனவே சர்வதேச அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் இத்தாலியில் நடந்த மோட்டார் வாகன கண்காட்சியில் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா என்ற காரை காட்சிப்படுத்தியது. இந்த காரை தான் மாருதியுடன் இணைந்து இந்தியாவில் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த காரை முதன்முறையாக இந்நிறுவனம் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது.

நமக்கு கிடைத்த தகவலின் படி மாருதி நிறுவனம் இந்த காரை வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்காக அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல் 2020ம் ஆண்டு முதல் பாதியில் இந்த உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிகிறது.

Maruti Suzuki e Vitara

மாருதி நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த இவிஎக்ஸ் என்ற கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த இ-விட்டாரா கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான டிசைன் அம்சங்கள் உள்ளன. முற்றிலுமாக எலெக்ட்ரிக் வாகனத்திற்காகவே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதன் வடிவமைப்பு அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட வடிவமைப்பாக இருக்கிறது.

இந்த இ-விட்டாரா காரின் வடிவமைப்பை பார்க்கும் போது இதில் உள்ள ஷார்ப்பான கிரீஸ்கள் அக்ரஸிவான லைன்கள் மஸ்குலரான ஸ்ப்ளெண்டர் மற்றும் சிறப்பான வீல் ஆர்ச் வடிவமைப்பு எல்லாம் இவிஎஸ் என்ற கான்செப்ட் காரின் விடிவமைப்பு போன்ற லுக்கில் இருப்பதால் மக்கள் பலர் இந்த காரின் வருகைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கிறார்கள்.

Maruti Suzuki e Vitara

இந்த கார் ஐந்து சீட்டர் கொண்ட ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி காராக இந்திய மார்க்கெட்டில் களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே இந்த காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும், ஹோண்டா நிறுவனம் எலவெட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் சிட்ரோ நிறுவனம் பசால்ட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மார்க்கெட்டில் டாடா நிறுவனத்தின் கர்வ் இவி கார் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 400 கார் ஆகியவை விற்பனையில் இருக்கின்றன.

மாருதி நிறுவனம் குஜராத்தில் உள்ள தனது ஆலையில் வைத்து இந்த காரை தயாரிக்கிறது. இந்த காரில் நிறுவனம் முதற்கட்டமாக எல்எஃப்பி பேட்டரிகளை பொருத்துகிறது. இந்த பேட்டரிகளை பிஒய்டி நிறுவனத்தில் இருந்து அந்நிறுவனம் வாங்குகிறது.

இது மட்டுமல்லாமல் இதில் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டாராகிய இரண்டு விதமான மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இதற்கு பவர் கொடுப்பதற்காக 49 கிலோ வாட் ஹவர் மற்றும் 61 கிலோ வாட் ஹவர் என இரண்டு விதமான பேட்டரிகளும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்0 இது டிசி பாஸ்டர் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேட்டரி மூலம் இந்த கார் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நமக்கு தெரிந்த தகவலின் படி 61 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் இந்த கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் ரேஞ்ச் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தத்தின்படி இந்த கார் டொயோட்டா பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அதுவும் 2005ம் ஆண்டு இந்த கார் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த கார் 184 எச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோக முன்பக்க வீலை மட்டும் கொண்ட டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது 144 எச்பி பவரை வெளியிடும் திறன் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக 189 என்எம் டார்க் திறன் இதில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த காரில் உட்புறத்திலும் வெளிப்பக்கத்திலும் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் பொருத்தப்பட உள்ளன. தற்போது உள்ள மாடர்ன் கார்களில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் இந்த காரிலும் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா நிறுவனம் தான் முன்னணியில் இருக்கும் நிலையில் மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நுழைந்தால் நிச்சயம் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். டாடாவின் விற்பனையை பெரிய அளவில் இது பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஏற்றார் போல் டாடா நிறுவனமும் தனது யுக்தியை மாற்றினால் நிச்சயம் மார்க்கெட்டில் நல்ல போட்டி ஏற்படும். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 13:20 [IST]
English summary
Maruti suzuki e vitara launch 2 months key info
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X