வெறும் ரூ4.49 லட்சத்திற்கு மாருதி ஈக்கோ காரை ஜிஎஸ்டி இல்லாமல் வாங்கலாமா? எப்படி, எங்கு வாங்கலாம்?
மாருதி சுஸூகி ஈகோ காரை ராணுவத்தின் மிலிட்டரி கேன்டீன் மூலம் வாங்குவதற்கும் சாதாரணமாக ஷோரூம் சென்று வாங்குவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டிற்கும் விலை வித்தியாசங்கள் என்ன? இரண்டு கார்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
மாருதி நிறுவனத்தின் சுஸூகி ஈகோ கார் தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக ராணுவ கேண்டின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ராணுவ வீரர்கள் குறைந்த விலையில் இந்த காரை வாங்க முடியும். நாம் வெளியில் சாதாரணமாக ஷோரூமில் இந்த காரை வாங்குவதற்கும் ராணுவ கேண்டினில் இந்த காரை வாங்குவதற்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஜிஎஸ்டி தான். ராணுவ கேண்டீனில் ஜிஎஸ்டி என்பது கிடையாது.

இதனால் குறைந்த விலையில் மாருதி ஈகோ கார் ராணுவ கேண்டினில் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் ராணுவ வீரர்கள் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும்? எந்தெந்த வேரியன்ட்களை எல்லாம் வாங்கலாம் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே நாம் தெளிவாக காணப் போகிறோம்.
இந்த மாருதி ஈகோ கார் மொத்தம் 2 விதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் ராணுவ கேண்டீனில் விற்பனையாகிறது. அதன்படி 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி மேனுவல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 5 சீட்டர், 7 சீட்டர், 5சிட்டரில் ஏசி ஆப்ஷனும், கார்கோ ஆப்ஷனும் இருக்கிறது.

இதன்படி 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் காரை பொறுத்தவரை 5 சீட்டர் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் கார் வெளிமார்க்கெட்டில் ரூ 5.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ராணுவ கேண்டிலில் ரூ 4.49 லட்சம் தான். அதாவது இந்த காரை வாங்குவதன் மூலம் ராணுவ வீரர்கள் ரூ82,309 ரூபாயை சேமிக்க முடியும்.
அடுத்ததாக கார்கோ வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ5.47 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ மார்க்கெட்டில் ரூ4.73 லட்சம் தான் இதன் மூலம் ரூ73,244 ராணுவ வீரர்களால் சேமிக்க முடியும்.அடுத்த வேரியண்டாக 7 சீட்டர் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் இருக்கிறது.இது வெளிமார்க்கெட்டில் ரூ4.61 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இதுவே ராணுவ மார்க்கெட்டில் ரூ4.75 லட்சம் தான். இதை வாங்குவதன் மூலம் ராணுவ வீரர்களால் ரூ85,904 ஆயிரத்தை சேமிக்க முடியும். 5 சீட்டர் ஏசி வேரியன்ட் கார் வெளி மார்க்கெட்டில் ரூ5.68 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ராணுவ மார்க்கெட்டில் ரூ4.81 லட்சம் தான். இதை வாங்குவதன் மூலம் ராணுவ வீரர்கள் ரூ86,304 சேமிக்க முடியும்.
அடுத்ததாக 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் உடன் ராணுவ மார்க்கெட்டில் ஒரே ஒரு வேரியண்ட் கார் மட்டுமே விற்பனையாகி வருகிறது. 5 சீட்டர் ஏசி கார் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இது வெளிமாக் மார்க்கெட்டில் ரூ6.58 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ மார்க்கெட்டில் ரூ5.62 லட்சம் தான். இதை வாங்குவதன் மூலம் ரூ95,549 பணத்தை ராணுவ வீரர்களால் மிச்சம் செய்ய முடியும்.
இந்தியாவில் ராணுவ கேண்டீன் மூலம் வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதால் ராணுவ வீரர்கள் அதை குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு பல்வேறு விதமான கண்டிஷன்கள் உள்ளன. குறிப்பிட்ட ரேங்கில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட முறை மட்டுமே வாகனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் இருக்கிறது. அந்த விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்வேறு இடங்களில் ராணுவ கேண்டீன்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை பல்வேறு விதமான பொருட்கள் ராணுவ கேண்டீன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. ராணுவ கேண்டின் மூலம் பொருட்கள் வாங்குவது நிச்சயம் ராணுவ வீரர்களுக்கு லாபம் தான்.


Click it and Unblock the Notifications









