டாக்ஸி 'புக்' பண்றதுக்கு பதிலா சொந்தமா இந்த காரை வாங்கீரலாம்! விலை இவ்ளோதானா! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விடு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10,985 ஈக்கோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11,859 ஆக இருந்தது. இது சிறிய அளவிலான வீழ்ச்சி ஆகும்.
அதாவது 874 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது சிறிய அளவிலான சரிவு மட்டுமே என்பதால், வரும் மாதங்களில் எல்லாம் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை காலம் வரவுள்ளதால், மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை 5.32 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.58 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி ஈக்கோ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 81 பிஎஸ் மற்றும் 104.4 என்எம் ஆக உள்ளது. அதே நேரத்தில் சிஎன்ஜி இன்ஜினின் பவர் அவுட்புட் 72 பிஎஸ் மற்றும் 95 என்எம் மட்டுமே.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, நல்ல மைலேஜ் கிடைக்கும். அதாவது இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்கும். ஆனால் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்க கூடியதாக உள்ளது.
மாருதி சுஸுகி ஈக்கோ காரானது, 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ளது. எனவே அதிக மைலேஜ் கிடைக்க கூடிய அதே நேரத்தில், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு கார் வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
விலை ஓரளவிற்கு குறைவு என்பது, மாருதி சுஸுகி ஈக்கோ காரின் கூடுதல் பலம். அதேபோல் இந்த காரில் வழங்கப்படும் வசதிகளின் எண்ணிக்கையும் குறைவுதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு, நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ ஏற்றது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும். இந்தியாவின் கிராமப்புறங்களிலும் மாருதி சுஸுகி ஆம்னி கார் இல்லாத குறையை, மாருதி சுஸுகி ஈக்கோ போக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications








