7 பேர் போக கூடிய கார் 27 கிமீ மைலேஜ் குடுக்குதா! விலை எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ஷோரூம்ல இருப்பீங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஈக்கோ கார் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 9,354 ஈக்கோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 10,771 ஆக உயர்ந்துள்ளது.

இது 15 சதவீத வளர்ச்சி ஆகும். நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற ஓரளவு குறைவான விலை, அதிகம் பேர் பயணம் செய்யலாம் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய 3 காரணங்களால்தான், மாருதி சுஸுகி ஈக்கோ கார் இந்திய வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்து இழுத்து வருகிறது.

Maruti Suzuki Eeco

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை 5.32 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 6.58 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி ஈக்கோ காரானது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் ஏற்றதாக உள்ளது.

Maruti Suzuki Eeco Side Design

அத்துடன் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியது என்பது இந்த காரின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் ஆகும். மாருதி சுஸுகி ஈக்கோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 81 பிஎஸ் பவர் மற்றும் 104.4 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. மறுபக்கம் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது பவர் அவுட்புட் குறைவாகவே கிடைக்கும்.

அதாவது சிஎன்ஜி மூலம் இயங்கும்போது அதிகபட்ச பவர் அவுட்புட் 72 பிஎஸ் மற்றும் 95 என்எம் மட்டுமே ஆகும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நேரடி போட்டி என எந்தவொரு காரும் இல்லை. எனவே தனிக்காட்டு ராஜாவாக மாருதி சுஸுகி ஈக்கோ வலம் வந்து கொண்டுள்ளது. வரும் காலங்களில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 23:01 [IST]
English summary
Maruti suzuki eeco sales report june 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+