27 கிமீ மைலேஜ்... 7 பேர் ஜம்முனு போக கூடிய காரோட விலை இவ்ளோதானா... இதுக்கு மேலயும் பைக்லாம் வாங்கணுமா?
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). இதன் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் 10,960 ஈக்கோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 12,818 ஆக இருந்தது. இது 14 சதவீத வீழ்ச்சி ஆகும்.
வீழ்ச்சி என்றாலும் கூட, மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சிறப்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.32 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.58 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஈக்கோ காரானது, 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. குறைவான விலை மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான சீட்டிங் ஆப்ஷன்கள் ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி ஈக்கோ புகழ்பெற்று விளங்குகிறது.
இதுதவிர இந்த கார் மிகவும் பிரபலமாக இருந்து வருவதற்கு மைலேஜ் (Mileage) மற்றொரு முக்கியமான காரணம் ஆகும். மாருதி சுஸுகி ஈக்கோ காரானது, பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 2 இன்ஜின்களுடனும், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த காரில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிஎன்ஜி வேரியண்ட், ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி ஈக்கோ காரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி ஈக்கோ போட்டியிட்டு வருகிறது. இதன் முக்கிய போட்டியாளரான ரெனால்ட் ட்ரைபர் கார், 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.97 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். மாருதி சுஸுகி ஈக்கோ மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய இரண்டுமே இந்தியாவில் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய 7 சீட்டர் கார்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் தரக்கூடிய அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ மிகச்சிறந்த ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








