7 பேர் போற இந்த கார் 27 கிமீ மைலேஜ் தருதா! லோன் போடாம அக்கௌண்ட்ல இருக்கற காச வெச்சே வாங்கீட்டு வந்தரலாம்!

மிகவும் குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ளீர்களா? அப்படியானால் மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) உங்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம். இந்தியாவில் தற்போதைய நிலையில் வெறும் 5.32 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே மாருதி சுஸுகி ஈக்கோ கார் கிடைத்து வருகிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட மிகவும் அதிகம் எல்லாம் இல்லை. வெறும் 6.58 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே மாருதி சுஸுகி ஈக்கோவின் டாப் வேரியண்ட்டை வாங்கி விடலாம்.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 வகையான ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி ஈக்கோ காரை நீங்கள் தேர்வு செய்ய முடியும். விலை குறைவு, நிறைய பேர் பயணம் செய்ய முடியும் ஆகிய சிறப்பம்சங்களுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி ஈக்கோ திகழ்கிறது.

Maruti Suzuki Eeco Side Design

மாருதி சுஸுகி ஈக்கோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி ஈக்கோ கருதப்படுகிறது. இது மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஒவ்வொரு மாத சேல்ஸ் ரிப்போர்ட்டிலும் (Sales Report) எதிரொலிக்கிறது. அதாவது மாருதி சுஸுகி ஈக்கோ கார் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

Maruti Suzuki Eeco

நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமும் இது தொடர்ந்துள்ளது. நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 11,653 ஈக்கோ கார்களை விற்பனை செய்துள்ளது. இது சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான் என்றாலும் கூட, நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்ததுடன் ஒப்பிட்டால், சிறிய அளவிலான சரிவு ஆகும்.

ஏனெனில் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 11,908 ஈக்கோ கார்களை விற்பனை செய்திருந்தது. அடுத்த வந்த அக்டோபர் மாதத்தில் 255 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2.14 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இருப்பினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், மாருதி சுஸுகி ஈக்கோ கார், கூடிய விரைவிலேயே வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு நேரடி போட்டியாளர் என எந்த காரும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) இல்லாத குறையை, மாருதி சுஸுகி ஈக்கோ போக்கி கொண்டுள்ளது என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. குறைவான விலை, அதிக மைலேஜ் மற்றும் நிறைய பேருக்கான இடவசதியை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ நல்ல ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2024, 23:49 [IST]
English summary
Maruti suzuki eeco sales report october 2024 price mileage
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+