7 பேர் போலாம்! இனி வாடகைக்கு டாக்ஸி எடுக்கறதுக்கு பதில் இந்த காரை சொந்தமா வாங்கீரலாம்! ஏன்னா விலை அவ்ளோ கம்மி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) இல்லாத குறையை, ஈக்கோதான் பூர்த்தி செய்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மாருதி சுஸுகி ஈக்கோவை வாங்குவதில், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாருதி சுஸுகி ஈக்கோவின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. மாருதி சுஸுகி ஈக்கோ காரின் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,908 ஈக்கோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,147 ஆக மட்டுமே இருந்தது. இது 7 சதவீத வளர்ச்சி ஆகும்.

Maruti Suzuki Eeco

இதன் மூலம் இந்தியாவில் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் (Top 10 Best Selling Cars In September 2024), மாருதி சுஸுகி ஈக்கோ 10வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால், நடப்பு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஈக்கோ கார், 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Maruti Suzuki Eeco Side Design

மாருதி சுஸுகி ஈக்கோ காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. அது 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் 2 ஆப்ஷன்களிலும் ஒரே ஒரு கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும்.

மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, பவர் அவுட்புட் விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் பவர் அவுட்புட் 81 பிஎஸ் மற்றும் 104.4 என்எம் ஆக உள்ளது. ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்டின் பவர் அவுட்புட் வெறும் 72 பிஎஸ் மற்றும் 95 என்எம் மட்டுமே.

எனினும் சிறப்பான மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி ஈக்கோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்டை தேர்வு செய்யலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை 5.32 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.58 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ளவர்கள், மாருதி சுஸுகி ஈக்கோவை பரிசீலனை செய்யலாம். அதிக மைலேஜ் வழங்குவது, மாருதி சுஸுகி ஈக்கோ காரின் மிகப்பெரிய பலம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 12, 2024, 16:39 [IST]
English summary
Maruti suzuki eeco sales report september 2024 7 per cent growth price mileage
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+