மாருதி படும் கஷ்டத்தை பார்த்தா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இனி இந்த கார்களை தைரியமாக வாங்கலாம்!

தன்னுடைய தயாரிப்புகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம். இதற்காக நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கதாகவும், வரவேற்பை வழங்கக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது. மாருதிக்கு போட்டியாக விளங்கும் பெரும்பாலான நிறுவனங்கள், பாதுகாப்பான கார்களை மிக தாராளமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதேபோல், இந்தியாவில் பாதுகாப்பு திறன்மிக்க கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்தமாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே மாருதி சுஸுகி இன்றைய தினம் அதன் மலிவு விலை கார் மாடல்கள் இரண்டில் புதிய பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆல்டோ கே10 (Alto K10) மற்றும் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) ஆகியவற்றிலேயே புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம் (Electronic Stability Program), எனும் பாதுகாப்பு அம்சத்தையே இந்த கார் மாடல்களில் மாருதி சுஸுகி சேர்த்திருக்கின்றது. இரண்டு கார் மாடல்களின் அனைத்து வேரியண்டுகளிலும் இந்த அம்சம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Esp now standard in alto and s-presso

இந்த அம்சத்தைச் சேர்த்துவிட்டு விலை உயர்த்தியிருப்பாங்களோ என நீங்கள் கேட்கலாம். ஆனால், இங்குதான் ஓர் டுவிஸ்ட் இருக்கின்றது. ஆமாங்க, விலையில் எந்த மாற்றத்தையும் மாருதி சுஸுகி இதுவரை செய்யவில்லை. எனவே தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே இந்த சிறப்பம் சேர்ப்பு வேலையை மாருதி சுஸுகி பார்த்திருக்கின்றது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

இஎஸ்பி என குறிப்பிடப்படும் இந்த பாதுகாப்பு அம்சம், வாகனம் ஸ்கிட் ஆகுவதை தவிர்க்கவே பயன்படுகின்றது. எனவே சரிவான பாதையிலும் சறுக்காமல் அப்படியே இந்த அம்சம் கொண்ட வாகனம் நிற்கும். மேலும், இந்த அம்சம் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகியவற்றுடன் இணைந்து வேலை செய்து கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இத்தகைய தரமான தொழில்நுட்பத்தையே தன்னுடைய ஆரம்ப நிலை கார் மாடல்களான ஆல்டோ கே10 மற்றும் எஸ்-பிரஸ்ஸோவில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த இரண்டு கார் மாடல்களின் விற்பனையும் கணிசமான அளவில் உயரக் கூடும் என நம்பப்படுகின்றது.

மாருதி சுஸுகி ஆல்டோ: இந்த கார் குட்டியான தோற்றம் ஹேட்ச்பேக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு ஏற்ற காராக இது விளங்குகின்றது. ரூ. 3.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் மாடல் விற்கப்படுகின்றது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, சிறப்பம்சங்களும் இந்த காரில் தாராளமாக வழங்கப்படுகின்றது.

அந்தவகையில், 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், பவர் அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம், மேனுவல் ஏசி, சாவி இல்லாமல் நுழையும் வசதி, 4 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், புதிய சேர்க்கப்பட்ட இஎஸ்பி பாதுகாப்பு அம்சத்துடன் சேர்த்து இரண்டு ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

எஞ்சினைப் பொருத்தரை 1.0 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 67 பிஎஸ் மற்றும் 89 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதே எஞ்சினே சிஎன்ஜி தேர்விலும் பயன்படுத்தப்படுகின்றது. அது 57 பிஎஸ் மற்றும் 82.1 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ: ஆல்டோ கே10 ஹேட்ச்பேக் கார் மாடலைக் காட்டிலும் சற்று அதிக விலையில் விற்கப்படும் கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 4.26 லட்சம் ஆகும். மேலும், இதன் அதிகபட்ச விலை ரூ. 6.11 லட்சம் ஆகும்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை 1.0 லிட்டர் கே10பி எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 68 பிஎஸ் மற்றும் 89 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்களுடன் வழங்கப்பட்டு இருக்கும். இதுதவிர, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், எம்ஐடி வசதியுடன் கூடிய டிஜிட்டல் திரை, இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு அம்சம் கூட்டப்பட்டு இருக்கும் இரண்டு கார் மாடல்களும் இந்தியாவின் விலை குறைவான கார் மாடல்கள் ஆகும். இதில் சிறப்பம்சங்களை மாருதி சுஸுகி சேர்த்திருப்பது, பட்ஜெட் கார் விரும்பிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த கார்களின் விலை விற்பனை சற்றே உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2024, 20:00 [IST]
English summary
Maruti suzuki enhances safety with esp in alto k10 and s presso
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+