மாருதி எர்டிகா காரை இப்பவே வாங்கினா தான் உண்டு! எல்லாரும் வாங்குறாங்க... டெலிவிரி லேட் ஆகலாம்!

இந்தியாவில் கார்களை வாங்குவதில் மக்களின் இரசனை தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு மாதமும் வெவ்வேறான கார்கள் மக்களால் அதிகம் வாங்கப்படுபவைகளாக உள்ளன. இதில் பெரும்பாலும் மாருதி சுஸுகி கார்கள் தான் முன்னிலை வகிக்கின்றன. இந்த வகையில், நடந்து முடிந்த 2024 அக்டோபர் மாத விற்பனையிலும் நம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக விலைமிக்க மாருதி கார் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்த கார் அது என்பதையும், கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட முதல் 10 கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம். ஒவ்வொரு மாதத்திலும் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களை எடுத்து பார்த்தால், அதில் குறைந்தப்பட்சம் 6- 7 மாருதி கார்களாவது இருக்கும். இந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்திவரும் மாருதி சுஸுகியில் இருந்து கடந்த அக்டோபர் மாதத்திலும் 6 கார்கள் டாப்-10 இடத்திற்குள் உள்ளன.

top-10 sold cars october 2024

இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக மாருதி சுஸுகி எர்டிகா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எர்டிகா கார்களின் எண்ணிக்கை 18,785 ஆகும். இது வழக்கமாக ஒரு மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எர்டிகா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும்.

2023 அக்டோபர் மாதத்திலும் 14,029 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், எர்டிகா கார்களின் விற்பனை எண்ணிக்கை 4,756 யூனிட்கள் அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகியின் 7-சீட்டர் எம்பிவி காராக விளங்கும் எர்டிகாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.69 லட்சத்தில் இருந்து ரூ.13.03 லட்சம் வரையில் உள்ளன. எர்டிகா சிஎன்ஜி காரும் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

top-10 sold cars october 2024

எர்டிகாவுக்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 17,539 ஆகும். 2023 அக்டோபரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. எனவே, இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்திருப்பினும், ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை 3,059 யூனிட்கள் குறைந்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 17,497 கிரெட்டா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. 2023 அக்டோபரில் வெறும் 13,077 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது இடத்தில் 16,565 யூனிட்கள் விற்பனை உடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா உள்ளது. 2023 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் பிரெஸ்ஸா கார்கள் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை.

top-10 sold cars october 2024

5வது மற்றும் 6வது இடங்களிலும் மாருதி சுஸுகியின் ஃப்ரான்க்ஸ் மற்றும் பலேனோ கார்கள் தான் உள்ளன. இவற்றின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 16,419 மற்றும் 16,082 ஆகும். ஆனால், இதில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 2023 அக்டோபரில் 11,357 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. பலேனோ கார்கள் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை.

7வது இடத்தில் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக பஞ்ச் உள்ளது. 15,740 பஞ்ச் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது. 8வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ 15,677 கார்கள் விற்பனை உடன் உள்ளது. இந்த லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் முறையே டாடா நெக்ஸான் (14,759) மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (14,083) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் அதிகம் விற்கப்பட்ட முதல் 10 கார்களை பற்றி மட்டுமே பார்த்துள்ளோம். முதல் 10 கார்கள் ஒவ்வொன்றும் 14 ஆயிரம் யூனிட்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா கார்களின் விற்பனை திடீரென இந்த அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதேபோல், ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 8, 2024, 11:05 [IST]
English summary
Maruti suzuki ertiga as indias most sold car in october 2024 check all details here
மேலும்... #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X