கல்யாணம் காச்சினா அத்தன பேரும் ஒரே கார்ல போலாம்! இவ்ளோ கம்மியான விலைக்கு வேற யாராலயும் விக்க முடியாது!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars) மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்க தொடங்கியதால், செடான் ரக கார்கள் (Sedan Cars) தங்கள் செல்வாக்கை முற்றிலுமாக இழந்து விட்டன. சமீப ஆண்டுகளாக இந்தியாவில் செடான் ரக கார்களின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுள்ளது. ஆனால் எஸ்யூவி என்ற சூறாவளி வீசிய போதிலும், எம்பிவி ரக கார்கள் (MPV Cars) ஆலமரமாய் சாயாமல் நீடித்து நிலைத்து கொண்டுள்ளன. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய எம்பிவி கார்களின் விற்பனை சிறப்பாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை தூள் கிளப்பி கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களை எல்லாம் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனையில் பின்னுக்கு தள்ளி வருகிறது என்றே கூறலாம்.

Maruti Suzuki Ertiga

இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் (10 Highest Selling Cars In September 2024) தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை பிடித்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

டாடா பன்ச் (Tata Punch), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Maruti Suzuki Ertiga Side Design

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,528 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17,441 ஆக உயர்ந்துள்ளது. இது 29 சதவீத வளர்ச்சி ஆகும்.

விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த 29 சதவீத வளர்ச்சிதான், மாருதி சுஸுகி எர்டிகா காரை, முதலிட அரியாசணையில் அமர செய்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது.

இதுதவிர 2வது வரிசை பயணிகளுக்கு மேற்கூரையில் வழங்கப்பட்டுள்ள ஏசி வெண்ட்கள், பேடில் ஷிஃப்டர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி எர்டிகா காரில் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி எர்டிகா 7 சீட்டர் கார் ஆகும். எனவே அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். அத்துடன் அதிக லக்கேஜ்களையும் இந்த காரில் உங்களால் கொண்டு செல்ல முடியும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் பூட் ஸ்பேஸ் (Boot Space) 209 லிட்டர்கள் ஆகும். ஆனால் 3வது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால், பூட் ஸ்பேஸை 550 லிட்டர்களாக உயர்த்தி கொள்ள முடியும்.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் இதை விட அதிக மைலேஜ் வழங்கும்.

அதாவது இந்த காரின் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் விலை 8.69 லட்ச ரூபாயாக உள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ஆகும்.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் காராக மாருதி சுஸுகி எர்டிகா உருவெடுத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் வசதிகளும், மைலேஜூம் சிறப்பாக இருக்க வேண்டும். கூடவே விலையும் ஓரளவிற்கு குறைவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எர்டிகா காரை தேர்வு செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 22:55 [IST]
English summary
Maruti suzuki ertiga become indias best selling car in september 2024 all details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+