ஒரு ஊரையே ஏத்தீட்டு போகலாம்! 27 கிமீ மைலேஜ் குடுக்கும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! மக்கள் வரிசைல நிக்கறாங்க!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற மகுடத்தை மாருதி சுஸுகி (Maruti Suzuki) தலையில் சுமந்து கொண்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.
இதுதவிர கார்களை பராமரிப்பது மிகவும் எளிது, சிறப்பான மைலேஜ், கவர்ச்சிகரமான டிசைன், நல்ல ரீசேல் வேல்யூ மற்றும் நாடு முழுவதும் சர்வீஸ் சென்டர்கள் போன்ற அம்சங்களும், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தை நம்பர்-1 இடத்தில் அமர வைத்துள்ளன. நடப்பு 2024ம் ஆண்டு மே மாத நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 1.75 லட்சம் பேர் மாருதி சுஸுகி நிறுவனத்துடைய கார்களின் டெலிவரிக்காக (Delivery) காத்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை முன்பதிவு (Bookings) செய்து விட்டு, தற்போது டெலிவரிக்காக காத்திருக்கின்றனர்.

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகிய கார்களுக்குதான், மிகப்பெரிய அளவில் முன்பதிவுகள் குவிந்து கிடக்கின்றன.
இதில், மாருதி சுஸுகி எர்டிகா காருடைய பெண்டிங் ஆர்டர்களின் எண்ணிக்கை மட்டும் 60 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மாருதி சுஸுகி டிசையர் ஆகிய கார்களுக்கான பெண்டிங் ஆர்டர்களின் எண்ணிக்கை முறையே 20 ஆயிரம் மற்றும் 17 ஆயிரமாக உள்ளது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பெண்டிங் ஆர்டர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் கார்களை விரைவாக டெலிவரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாருதி சுஸுகி நிறுவனம் மிக தீவிரமாக எடுத்து வருகிறது. இதில், 60 ஆயிரம் பெண்டிங் ஆர்டர்களை கொண்டுள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரில், 7 பேர் பயணம் செய்ய முடியும்.
பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில், மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு 7 சீட்டர் காருக்கு, இது மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை வெறும் 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா என்ற ஒரே ஒரு காருக்காக மட்டும் 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து விட்டு காத்து கொண்டிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் ஆகும். இது மாருதி சுஸுகி எர்டிகா காரின் மீது இந்திய வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








