இருட்டு கடையிலகூட இவ்ளோ அல்வா வித்திருப்பாங்களா தெரியல! பொட்டலம் பொட்டலமா விற்பதபோல மாருதி கார் விற்பனையாகுது!
இந்தியாவில் அதிக வேகமாக விற்பனையாகும் எம்பிவி (MPV Car) கார் என்கிற பெருமையை மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று பெற்றிருக்கின்றது. அது என்ன கார் மாடல், அதன் சிறப்புகள் என்ன? மற்றும் அதன் விலை எவ்வளவு என்பது போன்ற அக்கார் பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் ஒன்றாக எர்டிகா (Ertiga) இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இதுவே நாட்டின் அதிக வேகமாக விற்பனையாகும் எம்பிவி கார் மாடல் என்கிற மகுடத்தை தற்போது சூடியிருக்கின்றது.

2012 ஆம் ஆண்டிலேயே இந்த காரை முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது, மாருதி சுஸுகி. இதற்குள்ளாக அந்த கார் 1 மில்லியன் விற்பனை எனும் மாபெரும் விற்பனை எண்ணிக்கையை எட்டி இருக்கின்றது. அதேவேளையில், விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓராண்டிலேயே ஒரு லட்சம் யூனிட் விற்பனை என்கிற சாதனையைப் படைத்ததே இந்த எர்டிகா என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு அடித்தபடியாக 2019 ஆண்டில் 5 லட்சம் யூனிட் என்கிற சாதனையையும், 2020ம் ஆண்டில் 6 லட்சம் யூனிட் விற்பனை என்கிற சாதனையையும் அது படைத்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் 1 மில்லியன் யூனிட் விற்பனையை எர்டிகா எம்பிவி எட்டி இருக்கின்றது.

இந்த அளவு அதிக எண்ணிக்கையில் நாட்டில் வேறு எந்த எம்பிவி ரக காராகும் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் இந்தியாவின் ஃபாஸ்டஸ்ட் செல்லிங் எம்பிவி என மாருதி சுஸுகி தன்னுடைய எர்டிகா எம்பிவி-க்கு புகழாரம் சூட்டி இருக்கின்றது. எர்டிகா ஓர் மிட் சைஸ் எம்பிவி ரக காராகும்.
இதில் அதிக பேரால் பயணிக்க முடியும். இதனால்தான், குடும்பத்துடன் பயணிக்க விரும்புவோர்களின் தேடலில் எர்டிகாவும் முன்னணியில் இருக்கின்றது. தங்களுடைய இந்த தயாரிப்பு அதிக இட வசதிக் கொண்டது மட்டுமல்ல, அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதும்கூட என்றே நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, எர்டிகாவின் உயர்நிலை வேரியண்ட் மிக அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.

7 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆர்கேமிஸ் சரவுண்ட் சென்ஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்ற நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் எர்டிகாவில் இடம் இடம் பெற்றிருக்கின்றன.
கூடுதலாக திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் எம்ஐடி, 40க்கும் மேற்பட்ட இணைப்பு வசதியை வழங்கும் சுஸுகி கன்னெக்ட் அம்சம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டூ-டோன் அலாய் வீல்கள் ஆகியவையும் எர்டிகாவில் வழங்கப்படுகின்றன. இதுதவிர காருக்குள் இன்னும் பல பிரீமியம் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அந்தவகையில், ஏர் கூல்டு கப் ஹோல்டர்கள், முன் பக்க வரிசைக்கான ஆர்ம்ரெஸ்ட், பாட்டில் தாங்கிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பின்னிருக்கையாளர்களுக்கு தனி ஏசி வெண்ட், அதிக கம்ஃபோர்டபிளான இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் ஒரு சிலர் ஃபேமிலியுடன் பயணிக்க இந்த காரை தேர்வு செய்கின்றனர்.
இது அதிகம் மைலேஜ் தரக் கூடிய காராகவும் காட்சியளிக்கின்றது. எர்டிகாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இரண்டிலும், அடுத்த தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் விவிடி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அதிக மைலேஜை தரும் மோட்டார் ஆகும்.
இதில் பெட்ரோலில் இயங்கக் கூடியது ஒரு லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜையும் வழங்கும். இந்த கார் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், இப்போதைய நிலவரப்படி 80க்கும் மேற்பட்ட நாடுகளில் எர்டிகா விற்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதன் விலை குறைவு என்பதாலும், அதிகம் மைலேஜ் தரும் என்பதாலும் அதற்கு நல்ல வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் 8.69 லட்ச ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications









