7 பேர் சொகுசா போலாம்! மைலேஜில் டூவீலர்களையே தூக்கி சாப்பிடும் மாருதி கார்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த 7 சீட்டர் கார் ஆகும். இந்த காரின் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,975 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 12,273 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனையில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Maruti Ertiga

மாருதி சுஸுகி எர்டிகா காரின் இந்த வளர்ச்சிக்கு 3 முக்கியமான காரணங்கள் உள்ளன. அவை விலை, மைலேஜ் மற்றும் அதிகம் பேர் பயணிக்க கூடிய பெரிய கார் என்பதாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான ஒரு காராக கருதப்படுகிறது. இதற்கு அடுத்தபடியானது மைலேஜ். மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும்.

Maruti Suzuki Ertiga

அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். மறுபக்கம் மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் ஆகும்.

ஒரு 7 சீட்டர் கார் இவ்வளவு அதிகமான மைலேஜ் தருவது, சிறப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா காரில் தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கூடிய பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.

இதில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். சிறப்பான மைலேஜ் வழங்குவதும், பல்வேறு வசதிகளை கொண்டிருப்பதும் மாருதி சுஸுகி எர்டிகா காரின் கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 23:52 [IST]
English summary
Maruti suzuki ertiga december 2023 sales report full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+