ஒரு ஊரே ஒன்னா போகலாம்! ஆனா இந்த ரேட்லதான் விக்கறாங்களா! இதுக்கு மேலயும் இன்னோவாவை எல்லாம் வாங்குவீங்க?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இது 7 சீட்டர் கார் ஆகும். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களின் முதன்மையான தேர்வாக மாருதி சுஸுகி எர்டிகா இருந்து வருகிறது. இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாக இருக்கும் மாருதி சுஸுகி எர்டிகா காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம், 15,902 எர்டிகா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 8,422 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் 89 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இது உண்மையிலேயே மிகப்பெரிய வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலமாக, இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி எர்டிகா 4வது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆம்ப விலை 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இதுதவிர பேடில் ஷிஃப்டர் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாம் தவிர க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி உள்ளிட்ட வசதிகளையும் மாருதி சுஸுகி எர்டிகா பெற்றுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்றவை முக்கியமான வசதிகளாக இருக்கின்றன.
இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








