26 கிமீ மைலேஜ்! ஊரையே ஏத்தீட்டு போற மாருதி காரின் விலை உண்மையாவே இவ்ளோதானா! டொயோட்டா இன்னோவாக்குலாம் அப்பன்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி எர்டிகா காரின், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 14,888 எர்டிகா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 9,028 ஆக மட்டுமே இருந்தது. இது 65 சதவீத வளர்ச்சி ஆகும். இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. மாருதி சுஸுகி எர்டிகா காரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் முதல் காரணம்.

Maruti Suzuki Ertiga

மாருதி சுஸுகி எர்டிகா காரில், 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். இரண்டாவது காரணம் மைலேஜ் (Mileage). மாருதி சுஸுகி எர்டிகா கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் (Manual) மற்றும் ஆட்டோமேட்டிக் (Automatic) கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

இதில், பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட சிஎன்ஜி/மேனுவல் மாடல் அதிக மைலேஜ் வழங்கும்.

Maruti Suzuki Ertiga Seat

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதள தரவுகளின்படி, எர்டிகா காரின் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சம் இல்லை. இதில், 17.78 செமீ ஸ்மார்ட் ப்ளே ப்ரோ சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை இந்த காரின் முக்கியமான வசதிகளாக கூறலாம்.

இதுதவிர சுஸுகி கனெக்ட் வசதியுடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம், பேடில் ஷிஃப்டர்கள் ஆகியவற்றையும் மாருதி சுஸுகி எர்டிகா காரின் முக்கியமான வசதிகளாக குறிப்பிடலாம். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதிகம் பேர் பயணம் செய்யலாம், சிறப்பான மைலேஜ், அதிநவீன வசதிகள் மற்றும் சரியான விலை நிர்ணயம் ஆகிய அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி எர்டிகா காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கும், எர்டிகா காரின் வெற்றிக்கு பின்னால் உள்ள ஒரு முக்கியமான காரணம் என்பது எங்கள் கருத்து. அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், மாருதி சுஸுகி எர்டிகா காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 17:57 [IST]
English summary
Maruti suzuki ertiga registers 65 per cent sales growth in march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+