26 கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் காரோட விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்கீட்டு இருக்காங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் அதிகளவில் விரும்பி வாங்கும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) உள்ளது. எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, இந்திய வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கி கொண்டிருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் வசதிகள் ஆகியவற்றுடன், பெரிய குடும்பங்களுக்கும் ஏற்றதாக இருப்பது போன்றவற்றை இதற்கு முக்கியமான காரணங்களாக கூற முடியும். இது போன்ற காரணங்களால் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
மாருதி சுஸுகி எர்டிகா காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,580 எர்டிகா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வெறும் 12,315 ஆக மட்டுமே இருந்தது. இது 51 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி எர்டிகா 2வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் இருப்பது, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகும். இந்த 2 கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 610 யூனிட்கள் மட்டுமே. அதாவது மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19,190 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

எனவே மாருதி சுஸுகி எர்டிகா கார் நூலிழையில் மட்டுமே முதலிடத்தை இழந்துள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை வெறும் 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 13.03 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட, சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள், ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. வசதிகளை (Features) பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. இந்த காரில் 7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்யக்கூடிய, அதே நேரத்தில் வசதிகள் மற்றும் சௌகரியத்தில் சமரசம் இல்லாத, அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா பெஸ்ட் சாய்ஸ்!


Click it and Unblock the Notifications








