7 பேர் போற மாருதி கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே ஷோரூம்ல இருப்பீங்க!

இந்திய சந்தையில் 7 சீட்டர் கார்களுக்கு (7 Seater Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிறைய பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் அதிகமாக விற்பனையான டாப்-10 7 சீட்டர் கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 9,750 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

Maruti Suzuki Ertiga

ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 14,632 ஆக உயர்ந்துள்ளது. இது 50 சதவீத வளர்ச்சி ஆகும். இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒரு வளர்ச்சி என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. மாருதி சுஸுகி எர்டிகா காரின் இந்த வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

விலை மற்றும் மைலேஜ் (Mileage) ஆகியவை இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை வெறும் 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Maruti Suzuki Ertiga Sales Milestone

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

மறுபக்கம் மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், மாருதி சுஸுகி எர்டிகா காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6), கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி எர்டிகா போட்டியிட்டு வருகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட சற்று பெரிய குடும்பங்களுக்கு இது மிகவும் ஏற்ற கார் ஆகும்.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா கார் ஒட்டுமொத்தமாக 10 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை (Sales Milestone) சமீபத்தில் கடந்துள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா, இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த கார்களில் ஒன்று என்பதை இந்த சாதனை நிரூபிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 12, 2024, 23:54 [IST]
English summary
Maruti suzuki ertiga sales report january 2024 full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+