ஒரு ஊரே ஒன்னா உக்காந்து போகலாம்... விலை இவ்ளோதானா! வாங்கறதுக்கு ஷோரூம்ல அடிதடியே நடந்துகிட்டு இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரில், 7 பேர் பயணம் செய்ய முடியும். இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் மாருதி சுஸுகி எர்டிகா காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 13,893 எர்டிகா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 10,528 ஆக மட்டுமே இருந்தது. இது 32 சதவீத வளர்ச்சி ஆகும்.

Maruti Ertiga

இது சிறப்பான வளர்ச்சி என்பதுடன், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 7 சீட்டர் கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி எர்டிகா பெற்றுள்ளது. மற்ற 7 சீட்டர் கார்கள் எல்லாம், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு அருகில் கூட இல்லை.

ஆனால் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) மட்டும் விதிவிலக்கு. மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மட்டும், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு கடுமையான போட்டியை வழங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 13,717 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

Maruti Ertiga Airbags

இதன் மூலம் நூலிழையில்தான், இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான 7 சீட்டர் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி எர்டிகா தட்டி சென்றுள்ளது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை வெறும் 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள், இதை விட அதிக மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலை, சிறப்பான மைலேஜ் மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 17:25 [IST]
English summary
Maruti suzuki ertiga sales report may 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+