7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
7 சீட்டர் கொண்ட கார்களிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் காராக மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் இருக்கிறது. இந்த காரை வாங்க மக்கள் பலர் வரிசையில் காத்திருக்கிறார்கள். நீங்கள் தற்போது இந்த காரை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் இந்த காரின் காத்திருப்பு காலம் குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றிய விரிவான தகவல்களை தான் இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்.
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் பலர் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். அதன் விலை அதிகமாக இருந்தாலும், அதன் தேவை அதிகமாக இருப்பதால் அதை கருத்தில் கொண்டு மக்கள் பலர் இந்த ரக கார்களை அதிகம் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் இந்த செக்மெண்டிலேயே குறைந்த விலை 7 சீட்டர் கார் என்றால் அது மாருதி நிறுவனத்தின் ertiga கார் தான். இந்த கார் இந்த செக்மெண்டிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் அதிக நபர்கள் எர்டிகா காரை விரும்புவதால் இந்த காருக்கான டிமாண்ட் அதிகமாகிறது. இதனால் இந்த காரின் காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது.
நீங்கள் இந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை வாங்குவதாக இருந்தால் இந்த மாதத்திற்கான காத்திருப்பு காலம் குறித்த விபரங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாருதி எர்டிகா காரின் சிஎன்ஜி வெர்ஷனில் அதிக காத்திருப்பு காலம் இருக்கிறது.

அதிகபட்சமாக மாருதி நிறுவனத்தின் எர்டிகா காருக்கு தற்போது 16 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. இதை நாள் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் 126 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மாத அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இருப்பதிலேயே குறைவாக பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் காரின் காத்திருப்பு காலம் தான் குறைவாக இருக்கிறது.
மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் காரின் காத்திருப்பு காலத்தை பொறுத்தவரை 6 முதல் 8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதுவே பெட்ரோல் ஏஎம்டி வேரியன்ட்களுக்கு 8 முதல் 10 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதிகபட்சமாக சிஎன்ஜி வேரியன்டிற்கு 16 முதல் 18 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இந்த மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் விற்பனையாகி வருகிறது. இந்த இரண்டு கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 7 சீட்டர் கார்களாக உள்ளன. கடந்த ஓராண்டு விற்பனையை ஒப்பிடும்போது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் 72 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது. எர்டிகா கார் 65 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை மாதம் 14,150 வாடிக்கையாளர்கள் வரை வாங்குகிறார்கள். இதே செக்மெண்டில் உள்ள பொலேரோ, இன்னோவா, ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள் எல்லாம் இந்த அளவிலான எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. இந்த 14,180 என்பது கடந்த மார்ச் மாத விற்பனை நிலவரம். மக்கள் விரும்பி வாங்க என்ன காரணம் என்றால் இந்த காரில் உள்ள அம்சங்கள் தான்.
மாருதி எர்டிகா காரின் அம்சங்களை பொருத்தவரை இது ஒரு எம்பிவி ரக காராகும் இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 13 பிஎஸ் பவரையும், 137 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. பெட்ரோல் வேரியன்ட் காரை பொருத்தவரை 20.51 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.
சிஎன்ஜி வேரியன்ட் கார் என்றால் 21.11 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. இந்த காரில் பெடல் ஷிப்டர்கள், ஆட்டோ ஹெட்லை,ட் ஆட்டோ ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 8.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரில் உட்புற உள்ள அம்சங்களை பொருத்தவரை 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக சுஸூகி ஸ்மார்ட் ப்ரோ டெக்னாலஜியில் இது இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்ஸ் கமெண்ட்,கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்கள் எல்லாம் உட்பகுத்தப்பட்டுள்ளன. இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தில் வாகனங்களை டிராக் செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பங்களுடன் பயணிக்க இந்த மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் சிறந்த காராக இருந்தாலும், இந்த காரை வாங்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதால் இந்த காரை வாங்குபவர்கள் சற்று யோசித்து வருகிறார்கள். இதனால் மாருதி நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை அதிகரித்து காத்திருப்பு காலத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications









