மாருதி ஷோரூம்களில் மறைச்சி வைக்கப்பட்டு இருக்கும் இது என்ன தெரியுமா? இதை பற்றி தான் எல்லாரும் பேச போறாங்க!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் எலக்ட்ரிக் காரை விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் கார் தற்போதைக்கு கான்செப்ட் மாடலாக மட்டுமே இருக்கும் நிலையில், விற்பனைக்கு கொண்டுவரப்படும் எலக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள்ளாகவே எலகட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ மாருதி சுஸுகி ஈடுப்பட துவங்கிவிட்டதாக கூறி போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் முதல் எலக்ட்ரிக் கான்செப்ட்டாக இவிஎக்ஸ் -ஐ கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அதன்பின், டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொபைலிட்டி கண்காட்சியிலும் இவிஎக்ஸ் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது.

maruti suzuki ev charging station

அதன்பின் மீண்டும் இந்தியாவில் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ நிகழ்ச்சியில் இவிஎக்ஸ் கான்செப்ட்டை மாருதி சுஸுகி காட்சிக்கு நிறுத்தியது. 2025 பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் இவிஎக்ஸ் கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட்ட மாருதி சுஸுகி எலக்ட்ரிக் கார் காட்சிக்கு நிறுத்தப்படலாம். அதாவது, விற்பனைக்குவர உள்ள முதல் மாருதி சுஸுகி எலக்ட்ரிக் கார் இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படலாம்.

முதல் எலக்ட்ரிக் காரை சற்று விலையுயர்ந்ததாக மாருதி சுஸுகி களமிறக்க உள்ளது. இதனால், இவிஎக்ஸ் எலக்ட்ரிக் கார் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம்களில் இருந்து விற்பனை செய்யப்பட உள்ளது. விலை குறைவான மாருதி கார்கள் அரேனா டீலர்ஷிப் ஷோரூம்களிள் இருந்தும், விலைமிக்க கார்கள் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம்களில் இருந்தும் விற்பனை செய்யப்படுகின்றன.

maruti suzuki ev charging station

இவிஎக்ஸ் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ள நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம்களில் இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவும் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு வெளியே சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவப்பட்டு, அது துணியால் மறைக்கப்பட்டு உள்ளதை காட்டும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலக்ட்ரிக் கார் ஆனது முக்கியமாக வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே உருவாக்கப்படுகிறது. இதன்படி, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இவிஎக்ஸ் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் மாருதி சுஸுகி கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இவிஎக்ஸ் என்பது கான்செப்ட்டின் பெயரே; மாருதி சுஸுகி அதன் முதல் எலக்ட்ரிக் காருக்கு வேறு பெயரை கூட சூட்டலாம்.

maruti suzuki ev charging station

அதேபோல், இவிஎக்ஸ் கான்செப்ட்டை போன்றுதான் விற்பனைக்கு கொண்டுவரப்படும் எலக்ட்ரிக் காரின் தோற்றம் இருக்கும் என உறுதியாக கூற முடியாது. கான்செப்ட்டில் சில திருத்தங்களை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், இவிஎக்ஸ் கான்செப்ட் மாடலில் நேர்த்தியான வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல் ரன்னிங் விளக்குகள் இருந்தன.

காரின் சக்கரங்கள் ஆனவை V-வடிவத்தில் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களாக வழங்கப்பட்டுள்ளன. பின் கதவுகளின் கைப்பிடிகள் காரின் பில்லர்கள் உடன் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் காரில் 60kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படலாம். இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ - 550கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய வகையில் காரின் ரேஞ்ச் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் சற்று தாமதமாகவே களமிறங்க உள்ளது. ஆனால், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவதுபோல், எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் நிலையங்களையும் ஆரம்பத்தில் இருந்தே கொண்டுவருகிறது.

Source: GaadiWaadi

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2024, 13:31 [IST]
English summary
Maruti suzuki ev charging station at nexa dealership showroom
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X