அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

கடந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் டோக்கியோ (Tokyo) நகரில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி எக்ஸ்போ (Japan Mobility Expo) வாகன திருவிழாவிலும் இந்த எலெக்ட்ரிக் கார் தரிசனம் வழங்கியது.

Maruti Suzuki eVX

மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சாலைகளில் தற்போது இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனம் அரேனா (Arena) மற்றும் நெக்ஸா (Nexa) என 2 ஷோரூம்கள் வாயிலாக கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுவது சாதாரண கார்கள் ஆகும். மறுபக்கம் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுவது பிரீமியம் கார்கள் ஆகும்.

Maruti Suzuki eVX Interior Design

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் பிரீமியம் கார் என்பதால், நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.e8) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 60 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம். இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 550 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமிருக்காது.

மேற்கண்ட வசதிகள் தவிர, அடாஸ் (ADAS), ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம். இப்படி பல்வேறு வசதிகள் நிரம்பியதாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.

முன்பு மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த தகவல், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருடன் மாருதி சுஸுகி நிறுவனம் நிற்க போவதில்லை. இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, அதிகம் பேர் பயணம் செய்யும் வகையில் எலெக்ட்ரிக் எம்பிவி கார் ஒன்றையும், மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரக கார் ஒன்றையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

எனவே எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு மிகப்பெரிய சவால் காத்து கொண்டுள்ளது என்பதுதான் எங்கள் கருத்து. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முதல் இடத்தில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2024, 18:05 [IST]
English summary
Maruti suzuki evx electric car fresh details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+