மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா... சிங்கிள் சார்ஜில் 550 கிமீ ஓடும்... நடுக்கத்தில் டாடா...

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகின்றன. இதில், டாடா (Tata), எம்ஜி (MG), ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆனால் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகியிடம் இருந்து இன்னும் ஒரு எலெக்ட்ரிக் கார் கூட விற்பனைக்கு வராமல் இருப்பது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்த குறையை மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளது. ஆம், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) எலெக்ட்ரிக் காரை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

Maruti Suzuki eVX

இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன திருவிழாவில்தான், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோ (2023 Japanese Mobility Show) நிகழ்ச்சியிலும், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் தரிசனம் வழங்கியது.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் 60kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 550 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் டிரைவிங் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

Maruti Suzuki eVX Side Design

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்கள், சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதியாக உள்ளன. முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கு மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

அதை தொடர்ந்து உலகின் மற்ற சந்தைகளுக்கும், இந்தியாவில் இருந்து மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 15 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம். இது தற்போது விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

இதுதவிர இந்திய சந்தையில் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) எலெக்ட்ரிக் காருக்கும், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2024, 18:41 [IST]
English summary
Maruti suzuki evx electric car production export details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+