உறுதி பண்ணீட்டாங்க! சிங்கிள் சார்ஜில் 550 கிமீ ஓடும் மாருதி எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! டாடாவுக்கு செக்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டுள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) இன்னும் எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழையாமல் இருப்பது இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கூடிய விரைவிலேயே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிக கடுமையான போட்டி உருவாகவுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறங்க கிட்டத்தட்ட தயாராகி விட்டது.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) என்ற பெயரில், அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார், வரும் 2025ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki eVX

அதற்கு முன்னதாக வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதமே, மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்திய தலைநகரான புது டெல்லியில் (New Delhi), வரும் ஜனவரி மாதம் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாகன திருவிழா நடைபெறவுள்ளது.

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தொடங்கும் இந்த வாகன திருவிழா, அதே மாதம் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வாகன திருவிழாவில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Maruti Suzuki eVX Dashboard

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாகன திருவிழாவில் காட்சிப்படுத்தப்படவிருப்பது, மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஆகும். இந்த வாகன திருவிழாவில் மூலமாக உலகளாவிய அளவில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அதை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில், அதாவது 2025ம் ஆண்டின் மத்தியில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 60 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம்.

இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தொலைவு சுமார் 550 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) அனேகமாக 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் 15 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருக்கு மிக கடுமையான நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2024, 22:15 [IST]
English summary
Maruti suzuki evx to be showcased in bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+