வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவிற்கு கொண்டு ரெடியான மாருதி! அனுமதிக்காக வெயிட்டிங்!
மாருதி நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் செக்மெண்டில் தனது வாகனங்களை களம் இறக்க திட்டமிட்டு வரும் நிலையில், தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காருக்கான டிசைன் காப்புரிமைக்கான விண்ணப்பத்தை செய்துள்ளது. ஏற்கனவே இந்தோனேசியாவில் காட்சிப்படுத்தப்பட்ட அதே காரின் வடிவமைப்பை தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களையும் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் முதல் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திவிட்டன. இந்நிலையில் மாருதி நிறுவனம் தான் தாமதமாக எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறங்கும் நிறுவனமாக இருக்கிறது.

இந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக மாருதி சுஸூகி இவிஎக்ஸ் என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இந்த காரின் கான்செப்ட் வெர்ஷன் ஏற்கனவே இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக இடபிள்யூஎக்ஸ் என்ற சிறிய ரக எஸ்யூவி கார் ஒன்றை இந்தியாவில் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது டிசைன் காப்புரிமை கோரி இந்தியாவில் அந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
இந்த காரை ஏற்கனவே இந்தோனேசியாவில் நடந்த பாங்காக் மோட்டார் ஷோ கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த காரை தான் இந்நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரப் போவதாக அறிவித்து இதற்கான காப்புரிமையை கோரியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பை பார்க்கும் போது ஏற்கனவே மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் வேகன்ஆர் காரின் வடிவமைப்பு போல தான் இருக்கும். அதாவது இந்த காரை வேகன்ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்று கூறிவிடலாம்.

இந்த மாருதி இடபிள்யூஎக்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது ஏற்கனவே இந்தியாவில் உள்ள டாடா டியாகோ இவி, டாடாபஞ்ச் இவி மற்றும் எம்ஜி கோமெட் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3395மிமீ நீளமும், 1475மிமீ அகலமும், 1620மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 230கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பேட்டரி ஆப்ஷன் குறித்த விபரங்கள் எதுவும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் எத்தனை விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கிறது என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த காரின் வடிவமைப்பில் நீளமான ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு காருக்கு சிறப்பான லுக்கை கொடுக்கிறது. மேலும் இந்த காரில் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் வெளிப்புறத்தில் நியான் பச்சை நிறத்தையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்திலும் பச்சை நிற தீம் வழங்கப்பட்டுள்ளது. எம் ஜி கோமெட் இவி காரில் இருப்பது போல இந்த காரிலும் உட்புறம் நீளமான டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என இரண்டு வகைக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான பவர் விண்டோ ஸ்விட்ச் எல்லாம் சென்டர் கன்சோலில் வழங்கப்பட்டுள்ளது.
நாம் முன்னரே சொன்னபடி இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது ஒருமுறை சார்ஜ் செய்தால் 230கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்படும் என தெரிய வந்துள்ளது. ஆனால் இதன் பேட்டரி ஆப்ஷன்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த காரில் அதிக பவர் கொண்ட பேட்டரி ஆப்ஷன்களில் வரும் பட்சத்தில் இதன் ரேஞ்ச் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இதை விட குறைவான ரேஞ்ஜில் இந்த கார் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் முக்கியமாக மக்கள் பார்ப்பது அதன் விலை தான் இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 10-12 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் அதைவிட விலை குறைவாக இருப்பதால் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இணையான விலையில் கூட இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகளில் உள்ளன. இந்த காரில் உள்ள அம்சங்களை பொறுத்து தான் இது முடிவு செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் எப்பொழுது அடியெடுத்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் பலர் இருக்கிறார்கள். மாருதி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தால் நிச்சயம் இது மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது மக்கள் மத்தியில் நல்ல மவுசை ஏற்படுத்தி வரும் நிலையில் மாருதி நிறுவனம் இதற்கு மேலும் பலம் கூட்டும்.


Click it and Unblock the Notifications









