29 கிமீ மைலேஜ் தரும் காரின் விலையை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்! எல்லாரும் ஷோரூமுக்கு படையெடுக்கறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை தற்போது கடந்துள்ளது. 1.50 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த பிரம்மாண்டமான மைல்கல் ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மிக குறுகிய காலத்தில் இந்த பிரம்மாண்டமான மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
அதாவது வெறும் 14 மாதங்களிலேயே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், 1.50 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்து விட்டது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசியில்தான் இந்தியாவில் விற்பனைக்கே கொண்டு வரப்பட்டது.

சுமார் 14 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், 1.50 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் எட்டி விட்டது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டுவதற்கு 10 மாதங்கள் எடுத்து கொண்டது.
ஆனால் அதற்கு அடுத்த 50 ஆயிரம் யூனிட்கள் வெறும் 4 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 7.51 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.04 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 1.2 லிட்டர் இன்ஜின் உடன் சிஎன்ஜி ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்படுகிறது.
இதில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகளும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களுக்கு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








