29 கிமீ மைலேஜ்! தீபாவளிக்கு துணிமணி எடுக்கற மாதிரி சகட்டு மேனிக்கு இந்த காரை வாங்கறாங்க! விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையிலான டிசைன், அதிநவீன வசதிகள், சிறப்பான மைலேஜ் மற்றும் சரியான விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், சாதனை மேல் சாதனைகளை படைத்து கொண்டுள்ளது. கடந்த 2023ம் வருடம் ஏப்ரல் மாத இறுதியில்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.
ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதமே, 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை (Sales Milestone) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்தது. இதை தொடர்ந்து தற்போது மற்றொரு பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கடந்துள்ளது.

2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 17.30 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், அதற்குள்ளாக மாருதி சுஸுகி நிறுவனம் 2 லட்சம் ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான சாதனை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 9 இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

இவை எல்லாம் தவிர, சுஸுகி கனெக்ட், 6 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அதிகப்படியான அதிநவீன வசதிகளை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகவும் ஏற்றதாக திகழ்கிறது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
அத்துடன் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த காரில் இருப்பதிலேயே அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியது இந்த இன்ஜின்தான். ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் பூர்த்தி செய்கிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 7.51 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.87 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கவர்ச்சிகரமான டிசைன், அதிநவீன வசதிகள் ஆகிய சிறப்பம்சங்களுடன், சிறப்பான மைலேஜையும் வழங்குவதால்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் சாதனைகளை படைத்து வருகிறது என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் விலை நிர்ணயம் சரியாக செய்யப்பட்டிருப்பது, இந்த காரின் மிகப்பெரிய பலம்.


Click it and Unblock the Notifications








