இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் மாருதி கார்! வெறும் 2 லட்சத்தில் பெரிய சம்பவம் பண்ண போறாங்க!

இந்திய கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இதனால் முன்னணி கார் நிறுவனங்கள் பலவும் தங்கள் வாகனங்களில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை வழங்கி வருகின்றன. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது. ஆம், தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு மாருதி சுஸுகி காரிலும் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு கிடையாது.

ஆனால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதால், அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை வழங்குவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரில், அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maruti Suzuki Fronx

இந்திய சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் இருக்கிறது. இந்த காரில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை பொருத்தி, மாருதி சுஸுகி நிறுவனம் சாலை சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் அடாஸ் வசதியுடன் கூடிய மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

இதன் மூலம் இந்திய சந்தையில் அடாஸ் வசதியுடன் கிடைக்க கூடிய முதல் மாருதி சுஸுகி கார் என்ற பெருமையை ஃப்ரான்க்ஸ் பெறவுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 7.51 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.04 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Maruti Suzuki Fronx Rear Design

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அடாஸ் வழங்கப்பட்டால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விலை தோராயமாக 2 லட்ச ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வளவு விலை உயர்ந்தாலும் கூட, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை வழங்குவதுடன் நிற்க போவதில்லை. இதை தொடர்ந்து மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரிலும் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே இனிமேல் மாருதி சுஸுகி கார்களிலும் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை நாம் வரிசையாக பார்க்க போகிறோம். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டால், அது கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் அடாஸ் தொகுப்பு அறிமுகம் செய்யப்படும்போது, விலை 2 லட்ச ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்றாலும் கூட, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம். இது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் டிரைவரின் சௌகரியத்தை அதிகரிக்கும் என்பதுதான் இதற்கு காரணம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2024, 15:09 [IST]
English summary
Maruti suzuki fronx adas variant launch soon all details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+