ஒரு லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் இவ்ளோ சீக்கிரமா வரப்போகுதா! அதிர்ச்சியில் டூவீலர் நிறுவனங்கள்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய இன்ஜின் ஆப்ஷன்கள்தான்.

Maruti Suzuki Fronx

அதாவது 1.0 லிட்டர் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் இதே இன்ஜின் உடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.01 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 21.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் இதே இன்ஜின் உடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Fronx Rear Profile

சிஎன்ஜி மாடலானது, இவை எல்லாவற்றையும் விட சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. அதாவது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வெர்ஷனில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் இதை விட இன்னும் அதிக மைலேஜ் வேண்டும் என நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரில் புதிய ஹைப்ரிட் (Hybrid) இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடிய அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்று என்ற பெருமையை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விரைவில் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்படுகின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் இந்த புதிய வெர்ஷன் அனேகமாக வரும் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்லத்த சீக்கிரம் கொண்டு வாங்கப்பா!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடிய வெர்ஷன் வந்தால், அது இன்னும் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, February 8, 2024, 19:16 [IST]
English summary
Maruti suzuki fronx hybrid launch details 35 kmpl mileage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+