இந்த கார் பஞ்சரான தள்ளிட்டுதான் போகணும் போலையே!.. ஸ்பேர் வீல் வழங்குவதை நிறுத்திய மாருதி சுஸுகி..

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஃபாரன்க்ஸ் (Fronx) ஒன்றாகும். இது ஓர் மாருதி சுஸுகியின் கிராஸோவர் எஸ்யூவி ரக காராகும். இந்த தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஃப்ரான்க்ஸ் கார் மாடலில் இரண்டு புதிய தேர்வுகளை மாருதி சுஸுகி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

புதிய வேரியண்டுகளுடன் சேர்த்து தற்போது மாருதி சுஸுகி மொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிக்மா (Sigma), டெல்டா (Delta), டெல்டா பிளஸ் (Delta+), டெல்டா பிளஸ் ஓ (Delta+ O), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்ஃபா (Alpha) ஆகியவையே அவை ஆகும்.

Maruti fronx

புதிதாக ஃப்ரான்க்ஸ் ஐஎஸ்எஸ் டெல்டா பிளஸ் (ஓ) 1.2 லிட்டர் 5 எம்டி இஎஸ்பி மற்றும் ஃப்ரான்க்ஸ் ஐஎஸ்எஸ் டெல்டா பிளஸ் (ஓ) 1.2 லிட்டர் ஏஜிஎஸ் இஎஸ்பி ஆகிய வேரியண்டுகளே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. முதல் ஒன்றிற்கு 8.93 லட்சம் ரூபாயும், இரண்டாவது ஒன்றிற்கு ரூ. 9.43 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். அதேவேளையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மாடலை நம்மால் ரூ. 7.51 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டு புதிய வேரியண்டுகளை இந்த கார் மாடலில் சேர்த்ததுடன் மாருதி சுஸுகி ஸ்பேர் வீலை இந்த கார் மாடலுக்கு வழங்குவதை நிறுத்தி இருக்கின்றது.

Spare wheel

மாருதி சுஸுகியின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. கார் பாதி வழியில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பஞ்சர் ஆகிவிட்டால் என்ன செய்வதென்று என்றே பலரை கேள்வி எழுப்பச் செய்திருக்கின்றது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக ஸ்பேர் வீலுக்கு பதிலாக டயர் ரிப்பேர் கிட்-ஐ மாருதி சுஸுகி இந்த கார் மாடலுக்கு வழங்குகின்றது.

அனைத்து தேர்வுகளுக்கும் இது கட்டாயம் வழங்கப்படுகின்றது. ஃப்ரான்க்ஸ் கார் மாடலில் 16 அங்குல வீல்கள் 195/60 ரக டயர்களே வழங்கப்படுகின்றன. வேரியண்டைப் பொருத்து பிரீமியம் வீல் ஆப்ஷன் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், உயர் நிலை தேர்வான ஆல்ஃபா ட்ரிம்மில் அழகான அலாய் வீல் வழங்கப்பட்டு இருக்கும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பத்து மாதங்களிலேயே இந்த கார் மாடல் 1 லட்சம் யூனிட் விற்பனையை எட்டியது. சென்ற ஆண்டு ஜனவரியிலேயே இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரண்டு விதமான பெட்ரோல் ஆப்ஷன்களில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் ஆகியவையே அவை ஆகும். இந்த மோட்டார்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரின் 5 ஸ்பீடு மேனுவல் தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.79 கிமீ மைலேஜையும், இதே மோட்டாரின் ஏஎம்டி ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 22.89 கிமீ மைலேஜையும் வழங்கும். இதேபோல், இதன் 1.0 லிட்டர் பூஸ்டர்-லிட் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.01 கிமீ முதல் 21.5 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிஎன்ஜி ஆப்ஷனிலும் இந்த காரை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். இது அதிகபட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.51 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த கார் மாடலின் சிஎன்ஜி ஆப்ஷன் ரூ. 8.46 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஃப்ரான்க்ஸ் இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த கார் மாடலில் இரண்டு புதிய வேரியண்டுகளை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இத்துடன், ஸ்பேர் வீல் வசதியை வெளியேற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த நடவடிக்கைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 10:58 [IST]
English summary
Maruti suzuki fronx new variants launched and spare wheel feature drop
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X