22.8 கிமீ மைலேஜ் தரும்னு சொன்னாங்க! ஆனா இந்த கார் உண்மையிலேயே எவ்வளவு தருது தெரியுமா?

மாரூதி நிறுவனம் ஃபிராங்க்ஸ் காரை ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மார்கெட்டில் ஒரு வலுவான விற்பனையை பெற்று வருகிறது. இந்த பலேனோ அடிப்படையிலான கிராஸ்ஓவர் கார் ரூ. 7.51 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது, 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. சமீபத்தில்,

கார்வாலே நிறுவனம் இந்த காரை சோதனை செய்தது, அ்ப்பொழுது ஏசி 23 டிகிரிக்கு அமைக்கப்பட்டு ஒரு அல்லது இரண்டு ஃபேன் வேகத்தில் இருக்கும். சோதிக்கப்பட்ட வேரியண்டிற்கு, ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு இயல்பாகவே இருந்தது. இதன் மூலம எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என்பதை கணக்கிட்டார்கள். மக்கள் பலர் இப்படியான கண்டிஷனில் தான் வாகனம் ஓட்டுவார்கள்.

Maruti Suzuki Fronx Mileage

நகர் பகுதியில் ஓட்டய போது, ​​78.6 கிமீ பயணித்து இதற்கு 6.62 லிட்டர் எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. எம்ஐடி 14 கிலோமீட்டர் மைலேஜைக் காட்டியுள்ளது, ஆனால் அவர்களது கணக்கீடுகள் உண்மையில் 11.8 கிலோமீட்டர் மைலேஜை என்பதைக் காட்டுகிறது. வாகனத்தில் காட்டும் மைலேஜை விட உண்மையில் குறைவான மைலேஜ் தான் கிடைக்கிறது.

நெடுஞ்சாலையில், ஃபிராங்க்ஸ் ஏஎம்டி கார் 5.04 லிட்டர் எரிபொருளைப் பயன்படுத்தி 91.7 கிமீ பயணித்தது. எம்ஐடி 14.9 கிலோமீட்டர் காட்டிய போதிலும், உண்மையான மைலேஜ் 18.1 கிலோமீட்டராக இருந்தது. இது நகர் பகுதியில் ஓட்டியதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது. இது அதிக மைலேஜை வழங்கும் என தெரிகிறது.

Maruti Suzuki Fronx Mileage

ஃப்ராங்க்ஸ் ஏஎம்டிக்கான ஒருங்கிணைந்த எரிபொருள் திறன் 13.37 கிலோமீட்டராக இருந்தது, இது அதன் உறுதிப்படுத்தப்பட்ட ARAI சான்றளிக்கப்பட்ட மைலேஜான 22.89 கிலோமீட்டரில் 58 சதவீதம் மட்டுமே. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் மைலேஜ் ரியல் வேல்டில் குறைவாக இருக்கும் என்பது பலருக்கு தெரியும். ஆனால் இதில் மிக குறைவாக உள்ளது.

மாரூதி சுஸூகி ஃபிராங்க்ஸ் ஏஎம்டி கார் 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் பீக் டார்க் திறனை வெளியிடும். 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினால் இந்த கார் இயக்கப்படுகிறது. டெல்டா எடிசன் ரூ 8.82 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.

Maruti Suzuki Fronx Mileage

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஃப்ராங்க்ஸ் டர்போ மேனுவல் எடிசன் காரின் உண்மையான மைலேஜை திறனை அவர்கள் சோதித்தார்கள். பெரும்பாலான மக்கள் மேனுவல் கியர் கார்களையே அதிகம் ஓட்டுகிறார்கள். இது தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த சோதனை மிக முக்கியமானது.

இந்த விரிவான சோதனை அணுகுமுறை, துல்லியமான மற்றும் அன்றாட ஓட்டுநர் நிலைமைகளின் பிரதிபலிப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.மக்கள் இந்த வாகனத்தை வாங்கி ஓட்டும் போது அவர்களுக்கு உண்மையிலேயே பெட்ரோலுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட உதவுகிறது. இதனால் பணம் அதிக செலவாகாமல் தடுக்க முடியும்.

மாரூதி சுசுகி ஃப்ரான்க்ஸ் அதன் செயல்திறன் மற்றும் அம்சங்களின் காரணமாக வாங்குபவர்கள் மத்தியில் ஒரு பிரபலமான தேர்வாக தொடர்கிறது. இந்த காரை நீங்கள் வாங்கும் முடிவில் இருந்தால் இந்த மைலேஜ் குறித்த விபரங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். விளம்பரங்கள் மற்றும் அந்நிறுவனம் சொல்லும் மைலேஜ் அப்படியே கிடைப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மைலேஜ் குறித்த விபரங்களை சான்றின் அடிப்படையில் வழங்குகிறார்கள். ரியல் வேல்டில் வாகனங்களை ஓட்டும்போது அது நிச்சயம் சான்றிழிக்கப்பட்ட மைலேஜை விட குறைவான மைலேஜை தான் தரும். இதனால் இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 8, 2024, 10:40 [IST]
English summary
The Maruti Suzuki Fronx AMT's real-world fuel efficiency test reveals its performance in city and highway driving, contrasting the actual mileage with ARAI claims.
மேலும்... #maruti suzuki #fuel efficiency #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X